உலகம்

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் பாரிய தீவிபத்து – 15 குடிசைகள் சாம்பலாகின

கொழும்பு, கிராண்ட்பாஸ் (Grandpass) காவல் நிலையப் பிரிவுக்கு உட்பட்ட மஹவத்த ரயில்வே பாதைக்கு அருகில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், அங்கிருந்த 15 குடிசைகள்  முற்றாக நாசமாகியுள்ளன.

இன்று பிற்பகல் ஏற்பட்ட இந்த தீவிபத்தில் சுமார் 21 குடிசை வீடுகள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தீயை அணைக்க நான்கு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், தற்போது தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சொத்து சேதங்கள் ஏற்பட்ட போதிலும், இந்தத் தீ விபத்தினால் உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ எதுவும் ஏற்படவில்லை என்று பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை; இது குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்