ஃபாக்லாந்து தீவு மீதான தன் பிடியை இறுக்கும் அர்ஜென்டீனா
ஃபாக்லாந்து தீவுகளைச் சுற்றி எண்ணெய் திட்டங்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மீதான தடைகளைக் கடுமையாக்குவதாக அர்ஜென்டினா ஜனாதிபதி ஜேவியர் மிலே Javier Milei தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டின் தென்பகுதியில் பாதுகாப்பு வளங்களை அதிகரிப்பதாகவும், இறையாண்மை மீறல்களுக்கு எதிராக தகுந்த பதிலடி கொடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான ஆணையில் கையெழுத்திடுவதாகவும் மிலே அறிவித்துள்ளார். அர்ஜென்டினாவின் பிரதான நிலப்பரப்பிலிருந்து சுமார் 500 கி.மீ (300 மைல்கள்) கிழக்கே அமைந்துள்ள பிரிட்டனின் வெளிநாட்டுப் பிரதேசமான ஃபாக்லாண்ட்ஸ் தீவை அர்ஜென்டினா நீண்டகாலமாக […]



