எனக்கா நிச்சயதார்த்தம்? – 10 ஆண்டுகளின் பின் வைரலாகும் அனிருத்தின் பதிவு
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரின் திருமண வரவேற்பு நேற்று நடைபெற்ற நிலையில், 10 ஆண்டுகள் கழித்து அவர் சமூக வலைத்தளத்தில் இட்ட பதிவொன்று வைரலாகி வருகிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு தனது நிச்சயதார்த்தம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அவர் பதிவொன்றை இட்டுள்ளார்.
அந்த பதிவில், “எனக்கா நிச்சயதார்த்தம்? ஹாஹாஹா… நான் தனியாக இருக்கிறேன். இன்னும் இளமையாகவும் இருக்கிறேன்” என நகைச்சுவையாகப் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், சரியாக 10 ஆண்டுகளுக்குப் பின்னர், 2026ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் திகதி அவரது திருமண வரவேற்பு நிகழ்வு நடைபெற்றுள்ளது.
2016ஆம் ஆண்டு வெளியிட்ட பதிவையும், 2026ஆம் ஆண்டு திருமண வரவேற்பு நிகழ்வையும் ஒப்பிட்டு ரசிகர்கள் சுவாரஸ்யமான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.




