IMFஇன் 07ஆவது மீளாய்வுக்கு திகதி நிர்ணயம்
இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் 7வது மீளாய்வு மற்றும் மதிப்பீட்டை டிசம்பர் 2 அன்று நடத்த IMF முடிவு செய்துள்ளது.
செயற்குழுவின் ஒப்புதலைத் தொடர்ந்து, இலங்கை 345 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியைப் பெறும்.
தற்போதைய மீளாய்வு 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் காலாவதியாகவுள்ள நிலையில், 07ஆவது மீளாய்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை அக்டோபர் மாதம், இலங்கையும் சர்வதேச நாணய நிதியமும் 7வது மீளாய்வு குறித்து ஊழியர் மட்டத்திலான உடன்படிக்கையை எட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




