கீவில் ட்ரோன் தாக்குலுக்கு இலக்கான கட்டிடம் – பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அச்சம்
உக்ரைனின் கீவ் பகுதியில் ரஷ்ய இன்று முன்னெடுத்த ஆளில்லா விமானத் தாக்குதலில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது.
இந்நிலையில் குறித்த கட்டிடத்தில் இருந்த 14 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
மீட்பு பணியாளர்கள் விரைந்து செயல்பட்டதாகவும், தற்போது 09 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.




