ஐரோப்பா

துருப்புக்களை மீளப் பெறும் விவகாரம் : அமெரிக்காவின் உத்தரவிற்காக காத்திருக்கும் நேட்டோ!

  • May 2, 2026
  • 0 Comments

ஜெர்மனியிலிருந்து 5,000 அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறும் அமெரிக்காவின் முடிவைப் புரிந்துகொள்ள  கூட்டணி அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதாக நேட்டோ செய்தித் தொடர்பாளர் அலிசன் ஹார்ட் ( Allison Hart)  கூறியுள்ளார். இந்த மாற்றம், ஐரோப்பா தொடர்ந்து பாதுகாப்பில் மேலும் முதலீடு செய்ய வேண்டியதன் அவசியத்தையும், நமது பகிரப்பட்ட பாதுகாப்பிற்கான பொறுப்பில் பெரும் பங்கை ஏற்க வேண்டியதன் அவசியத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஜெர்மனியிலிருந்து 5,000 அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவதாக […]

அரசியல் செய்தி

மலையகத் தமிழர்களுக்கான காணி உரிமையும், மும்முனைச் சமரும்!

  • May 2, 2026
  • 0 Comments

மும்மூர்த்திகள் இணைந்து செயல்படுவது பிரபஞ்சத்திற்கு நன்மை பயக்கும் என்பது ஐதீகம். மும்மூர்த்திகளின் ‘சங்கமமானது’ எப்போதும் சாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும் எனப் புராணங்களில் கூறப்பட்டுள்ளது. மும்மூர்த்திகளில் ஒருவரான சிவனை ஓரம் தள்ளிவிட்டுத் தக்கன் செய்த யாகம் தோல்வியிலேயே முடிந்தது என ஆன்மீக நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவலோகத்தில் நன்மைகள் நடப்பதற்கு மும்மூர்த்திகளின் ஐக்கியம் எவ்வளவு முக்கியமோ, அதுபோல்தான் மலையகத் தமிழர்களுக்குரிய அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலையை வென்றெடுப்பதற்கும் ‘முத்தரப்புகளின்’ சங்கமம் காலத்தின் கட்டாயத் தேவையாகும். அதாவது மலையக அரசியல்வாதிகள், […]

உலகம்

குழந்தைகளுக்கான மலேரியா தடுப்பு மருந்துக்கு WHO ஒப்புதல்!

  • May 2, 2026
  • 0 Comments

குழந்தைகளுக்கான முதல் மலேரியா சிகிச்சைக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில், ஆறு மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளில் 18 சதவீதமானோர் மலேரியாவால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் குழந்தைகளுக்கு சிகிச்சைகள் எதுவும் இல்லை. இதனால் பெரும்பாலான இறப்புகளும் பதிவாகியுள்ளன. 2024-ல் மலேரியாவால் 610,000 இறப்புகள் நிகழ்ந்தன, இதில் ஆப்பிரிக்காவில் சுமார் முக்கால்வாசி பேர் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளாகும். மலேரியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இதுவரை மூத்த குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட மருந்துக் கலவைகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும், […]

உலகம் செய்தி

ட்ரம்புக்கு எதிராக திரும்பிய தீவிர விசுவாசி!

  • May 2, 2026
  • 0 Comments

இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா நிதி உதவி வழங்குவதை அமெரிக்காவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தொழிலதிபருமான Marjorie Taylor Greene கண்டித்துள்ளார். லெபனானில் நடக்கும் கொடூரங்களை சுட்டிக்காட்டியுள்ள அவர், தாக்குதல்கள் உடன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். டொனால்ட் ட்ரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்த அவர், தற்போது ட்ரம்பின் வெளியுறவுக் கொள்கையை வெளிப்படையாக விமர்சித்துவருகின்றார். எப்ஸ்டீன் ஊழல் மற்றும் மத்திய கிழக்கு விவகாரங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் இவர்களுக்கிடையேயான அரசியல் உறவு முறிந்து போனது. இவரின் இந்த […]

உலகம் செய்தி

போர் எந்நேரத்திலும் தொடங்கலாம்!

  • May 2, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான போர் மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது. சர்வதேச ஒப்பந்தங்களை அமெரிக்கா மதிப்பதில்லை என்பதால், அந்நாடு எப்போது வேண்டுமானாலும் தாக்குதலைத் தொடங்கலாம் என்று ஈரான் கருதுகின்றது. அமெரிக்க அதிகாரிகளின் தற்போதைய கருத்துக்கள் வெறும் அரசியல் நாடகம் மற்றும் தங்களின் பொருளாதார நலன்களைக் காப்பதற்கான முயற்சி என்று ஈரான் ராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்காவின் எந்தவொரு ஆக்ரோஷமான நடவடிக்கையையும் எதிர்கொள்ளத் தங்களது ஆயுதப் படைகள் முழு தயார் நிலையில் இருப்பதாக […]

உலகம்

வியட்நாமில் பாண் உட்கொண்டவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு – பலர் வைத்தியசாலையில்!

  • May 2, 2026
  • 0 Comments

வியட்நாமின் குவாங் ட்ரி (Quang Tri ) மாகாணத்தில் உணவு விஷமாகியமை காரணமாக குறைந்தது 64 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உள்ளுர் பேக்கரி ஒன்றில் உணவு உட்கொண்டவர்களே இவ்வாறு நோய்வாய்ப்பட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை காலை முதல்  அதிக காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்று வலி, சோர்வு மற்றும் நீரிழப்பு போன்ற அறிகுறிகளுடன் நோயாளிகள் வரத்தொடங்கியதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு நரம்பு வழி திரவங்கள், வாய்வழி நீரேற்றம் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் வழங்கப்பட்டதாகவும், தற்போது அவர்கள் […]

உலகம்

மெக்சிகோவில் பாரிய பேருந்து விபத்து – 11 பேர் உயிரிழப்பு!

  • May 2, 2026
  • 0 Comments

மெக்சிகோவில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தது 11 பேர் உயிரிழந்ததாகவும், 32 பேர் காயமடைந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் 41 பேர் இருந்தனர். அவர்களில் ஆறு பேர் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்ததாகவும்,  மேலும் ஐந்து பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டள்ளது. விபத்தில் சிக்கிய பயணிகளை ஏற்றிச் சென்ற அந்தப் பேருந்து, நயாரிட்டில் உள்ள ஒரு பூங்காவிற்குச் சென்று கொண்டிருந்ததாக  முதற்கட்ட விசாரணையில் […]

ஐரோப்பா செய்தி

வட்டி விகித குறைப்பு சாத்தியப்படுமா? இங்கிலாந்து வங்கியின் தீர்மானம்!!

  • May 2, 2026
  • 0 Comments

இங்கிலாந்து வங்கியானது வட்டி விகிதங்களில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ளாமல் 3.75 என்ற தற்போதைய நிலையை பேண தீர்மானித்துள்ளதாக  அதன் ஆளுநர் ஆண்ட்ரூ பெய்லி அறிவித்துள்ளார். மத்திய வங்கியின் வட்டி விகிதங்களை நிர்ணயிக்கும் பணவியல் கொள்கைக் குழு (MPC), அதன் சமீபத்திய கூட்டத்திற்குப் பிறகு, இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. வட்டி விகிதங்களை மாற்றாமல் வைப்பதற்கான ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட குழுவின் வாக்கெடுப்பு, எட்டுக்கு ஒன்று என்ற விகிதத்தில் பிளவுபட்டது. வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் ஹியூ பில் […]

உலகம் செய்தி

60 நாள் கெடுவை முடக்கிய தற்காலிக போர் நிறுத்தம்!

  • May 2, 2026
  • 0 Comments

“ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்தமானது, போருக்கான நாடாளுமன்ற அனுமதியைப் பெறுவதற்கான 60 நாள் காலக்கெடுவை நிறுத்திவைக்கிறது.” இவ்வாறு அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட் ஹெக்செத் விளக்கமளித்துள்ளார். ஈரான்மீதான ராணுவ நடவடிக்கையை கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்கா ஆரம்பித்தது. போர் தொடுப்பதற்குரிய கட்டளையை பிறப்பிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தாலும் அது தொடர்பில் 60 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற வேண்டும். இதற்கமைய கடந்த மார்ச் 2 ஆம் திகதி இது தொடர்பில் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு ட்ரம்ப் […]

உலகம் செய்தி

ஈரானின் நிபந்தனைகளை ஏற்க முடியாது: ட்ரம்ப் திட்டவட்டம்!

  • May 2, 2026
  • 0 Comments

அமைதி பேச்சுக்காக ஈரான் முன்மொழிந்துள்ள நிபந்தனைகளில் தனக்கு திருப்தி இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேற்காசிய போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஈரான் அரசு திருத்தப்பட்ட புதிய நிபந்தனைகளை , பாகிஸ்தான் ஊடாக அமெரிக்காவிடம் தெரியப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி ட்ரம்ப், “ இரண்டு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் உள்ளது. எனினும், போரை முடிவுக்கு கொண்டு வர ஈரான் முன்மொழிந்துள்ள நிபந்தனைகள் ஏற்புடையவை அல்ல. அது […]