வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு இலங்கை அமைச்சரவை அங்கீகாரம்
2027ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்று (12) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும் செயற்படும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால், இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட உரையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் நிகழ்த்தவுள்ளார்.





