இலங்கை செய்தி

“செம்மணியில் 414 எலும்புக் கூடுகள் அடையாளம் – 409 அகழ்ந்தெடுப்பு”

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணியின்போது இரு எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 32 நாட்கள் அகழ்வு பணிகள் இடம்பெற்ற நிலையில் , கடந்த 23ஆம் திகதியுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் மூன்றாம் கட்டத்தின் 33ஆவது நாளான இன்றைய தினம் புதிதாக 2 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டன.. அவை இரண்டும் சிசுக்களுடையதாகும்.

இன்றைய தினம் என்புக்கூடுகள் எவையும் அகழ்ந்து எடுக்கப்படவில்லை.

அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 87 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , 414 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 409 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை