ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் அடர்ந்த காட்டில் 6 நாட்கள் தனிமை: மரணத்தை வென்று மீண்ட சிறுவன்

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில் ஆறு நாட்களாகக் காணாமல் போயிருந்த 17 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில் ஆறு நாட்களாகக் காணாமல் போயிருந்த 17 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

வில்லியம் என அடையாளம் காணப்பட்டுள்ள குறித்த சிறுவன், கடந்த வெள்ளிக்கிழமை நண்பர் ஒருவருடன் முகாமிடச் சென்றபோது காணாமல் போயுள்ளார். மெல்பேர்னுக்கு கிழக்கே சுமார் 180 கிலோமீற்றர் தொலைவில் உள்ள காட்டுப் பகுதியிலேயே அவர் காணாமல் போயிருந்தார்.

இரவு நேரங்களில் நிலவிய கடும் குளிரான காலநிலை காரணமாக சிறுவனின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் கவலை அடைந்திருந்தனர். இதையடுத்து பொலிஸ் மோப்ப நாய்கள், நீர்மூழ்கிக் குழுவினர் மற்றும் ஹெலிகொப்டர்கள் உதவியுடன் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை சிறுவன் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மீட்புப் பணியாளர்கள் அவரை ஹெலிகொப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்டதுடன், டோனட் மற்றும் தண்ணீர் போத்தல் வழங்கிய பின்னர் மருத்துவப் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

சிறுவனின் உடலில் சிறிய கீறல்கள் மட்டுமே காணப்பட்டதாகவும், அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் அவரது தாயார் எலிசபெத் பார்க்லி தெரிவித்துள்ளார்.

“அவர் நலமாக இருக்கிறார். அனைத்தும் சீராக உள்ளன. அவர் முழுமையான ஆரோக்கியத்துடன் இருக்கிறார். மீட்கப்படும் வரை ஒரே இடத்தில் இருந்து காத்திருந்துள்ளார். அவர் உயிருடன் இருப்பது எனக்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தருகிறது” என அவர் கூறியுள்ளார்.

மேலும் நகைச்சுவையாகக் கருத்து தெரிவித்த அவர், “இனி அவர் வீட்டை விட்டு வெளியே செல்லவே அனுமதிக்க மாட்டேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி