இந்தியா செய்தி

சிலிண்டர் விலை அதிகரிப்பு உழைக்கும் மக்களுக்கு எதிரான தாக்குதல் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

  • May 2, 2026
  • 0 Comments

வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளமை, உழைக்கும் மக்களுக்கு எதிரான தாக்குதல் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் குற்றம் சுமத்தியுள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது, “கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதியன்று ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து எரிபொருள் போக்குவரத்தில் தடை ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டணியின் அடாவடி தாக்குதலால் மேற்காசிய நாடுகளில் […]

உலகம் செய்தி

லெபனானில் ஐ.நா. அமைதி காக்கும் படை பணியை நீட்டிக்க வேண்டும் – சீனா வலியுறுத்தல்

  • May 2, 2026
  • 0 Comments

லெபனானில்நீண்டகாலமாக செயற்பட்டு வரும் ஐ.நா. அமைதி காக்கும் படையின் (UNIFIL) பதவிக்காலத்தை முடிவுக்குக் கொண்டுவரும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான சீனாவின் தூதர் ஃபூ காங் (Fu Cong) தெரிவித்துள்ளார். நியூயார்க் (New York) நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் லெபனானின் தற்போதைய நிலைமை குறித்து சீனா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், லெபனானில் முழுமையான போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படவில்லையென்றும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, […]

இலங்கை

ஹட்டன் பேருந்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

  • May 2, 2026
  • 0 Comments

ஹட்டன் – டிக்கோயா பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உயர்வடைந்துள்ளது. கடந்த புதன்கிழமை, டயகமவிலிருந்து போடைஸ் வழியாக ஹட்டன் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று டிக்கோயா பட்டல்கல பகுதியில், வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்தில் விழந்து விபத்துக்குள்ளாகியிருந்தது. இந்த விபத்தில், காயமடைந்த சுமார் 34 பேர், உடனடியாக அருகிலுள்ள கிளங்கன் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக, இந்த விபத்தில் பலத்த காயமடைந்திருந்த அக்கரப்பத்தனை, வெவர்லி பகுதியைச் சேர்ந்த […]

ஐரோப்பா செய்தி

அச்சுறுத்தல் நிலை உயர்வு – லண்டனில் அமெரிக்கத் தூதரகம் விடுத்த அவசர எச்சரிக்கை

  • May 2, 2026
  • 0 Comments

பிரித்தானிய அரசாங்கம் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் அளவை கடுமையான (Severe) நிலைக்கு உயர்த்தியதைத் தொடர்ந்து, லண்டனில் உள்ள அமெரிக்கத் தூதரகம் (US Embassy London), பிரித்தானியாவில் வசிக்கும் அமெரிக்கக் குடிமக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பொது இடங்களில் அதிக அவதானத்துடன் செயற்படுமாறும் , பாடசாலைகள், தேவாலயங்கள், சுற்றுலா தளங்கள் மற்றும் போக்குவரத்து மையங்கள் போன்ற கூட்டம் அதிகம் கூடும் இடங்களில் எச்சரிக்கையாக இருக்குமாறும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், பயணிக்கும் நேரங்களையும் வழித்தடங்களை மாற்றிக் கொள்ளவும், தங்களை எளிதில் […]

உலகம் செய்தி

ஈரானில் இரு மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் இணைய முடக்கம்!

  • May 2, 2026
  • 0 Comments

ஈரான் அரசு அமுல்படுத்தியுள்ள இணைய முடக்கம் இரு மாதங்களுக்கு மேலாக நீடிக்கின்றது. 64 ஆவது நாளாக நீடிக்கும் இத்தடையால் மக்களின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதுடன், அந்நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசின் கட்டுப்பாடுகளைத் தகர்க்கச் சிலர் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் கருவிகளைப் பயன்படுத்தினாலும், அது பெரும் அபாயத்தை உள்ளடக்கியுள்ளது. இத்தகைய கருவிகளை வைத்திருப்பது அல்லது பயன்படுத்துவது ஈரானில் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெற்றுத் தரக்கூடிய குற்றமாகக் கருதப்படுகிறது. இணையக் கண்காணிப்பு அமைப்பான நெட்பிளாக்ஸ், இந்தத் தடையால் ஈரான் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை […]

உலகம் செய்தி

ட்ரம்ப் நிர்வாகத்தை தட்டிக்கேளுங்கள்: அமெரிக்க மக்களிடம் ஈரான் கோரிக்கை!

  • May 2, 2026
  • 0 Comments

ஈரான்மீது அமெரிக்க அரசாங்கம் தொடுத்துள்ள போரை அந்நாட்டு மக்கள் தட்டிக்கேட்க வேண்டுமென ஈரான் வெளிவிவகார அமைச்சு வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவின் தாக்குதலானது எவ்வித தூண்டுதலும் இன்றி நடத்தப்பட்ட ஒரு சட்டவிரோத ஆக்கிரமிப்பாகும் என ஈரான் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Esmaeil Baqaei சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்காவின் போர்க்கால நடவடிக்கைகளுக்கு அந்நாட்டு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்பதே ஈரானின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது. இதனை வலியுறுத்தியே ஈரான் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தனது எக்ஸ் தளத்தில் மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார். அமெரிக்காவிற்கு எதிராக […]

ஐரோப்பா

துருப்புக்களை திரும்பப் பெறும் அமெரிக்கா – ஜெர்மனி விடுத்துள்ள அழைப்பு!

  • May 2, 2026
  • 0 Comments

ஐரோப்பிய நட்பு நாடுகள் தங்கள் பாதுகாப்பிற்கான அதிகப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று ஜெர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் அழைப்பு விடுத்துள்ளார். ஜெர்மனியிலிருந்து 5,000 அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவதாக அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு குறித்த கரிசனை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஐரோப்பாவில் அமெரிக்க வீரர்கள் இருப்பது “நமது நலனுக்கும் அமெரிக்காவின் நலனுக்கும் உகந்தது” என்று தெரிவித்துள்ளார். ஜெர்மனி உட்பட ஐரோப்பாவிலிருந்து அமெரிக்கா படைகளைத் […]

உலகம் செய்தி

அணுசக்தி ரகசியங்களை வழங்கியோருக்கு ஈரானில் மரண தண்டனை!

  • May 2, 2026
  • 0 Comments

இஸ்ரேலின் மொசாட்டுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட மேலும் இருவருக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. Yaqoub Karimpour மற்றும் Nasser Bekerzadeh ஆகியோருக்கே இவ்வாறு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரானின் அணுசக்தி மையங்கள் மற்றும் முக்கிய அரசு அதிகாரிகளைப் பற்றிய ரகசியத் தகவல்களை இவர்கள் பகிர்ந்துள்ளனர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பாதுகாப்பு தொடர்பான இந்த முக்கியமான விவகாரத்தில், நாட்டின் ரகசியங்களை வெளிநாட்டிற்கு கசியவிட்டதற்காக இந்த கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஈரானின் பாதுகாப்புப் படையுடன் தொடர்புடைய செய்தி நிறுவனம் இந்தத் […]

உலகம்

ஆஸ்திரேலியாவிற்கு படையெடுக்கும் இந்தியர்கள் பாரிய அளவில் அதிகரிப்பு!

  • May 2, 2026
  • 0 Comments

குடியேற்றத்திற்கு எதிரான தொடர்ச்சியான எதிர்ப்புகளுக்கு மத்தியில், இந்தியர்கள் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய புலம்பெயர்ந்தோர் குழுவாக உருவெடுத்துள்ளனர். ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகம் (ABS) வெளியிட்ட தரவுகளின்படி, 2025 ஜூன் 30 வரை சுமார் 971,020 இந்திய வம்சாவளியினர் ஆஸ்திரேலியாவில் வசித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகையில் ஏறக்குறைய 5.2 சதவீதத்தை பிடிப்பதாகவும், இது இங்கிலாந்தில் பிறந்த 970,950 பேரை விட சற்று அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இந்திய வம்சாவளியினரின் மக்கள்தொகை பெருமளவில் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் பொலிஸ் வாகனத்தை கொளுத்திய பெண் கைது!

  • May 2, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் பகுதியில் நடந்த வன்முறையின்போது காவல்துறை வாகனத்துக்கு தீ வைத்த பூர்வக்குடி பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பூர்வக்கு மக்கள் வாழும் ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் பகுதியில் 5 வயது சிறுமியொருவர் கடத்தி கொலை செய்யப்பட்டிருந்தார். இக்கொலைச் செயலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்ட பிறகு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து வைத்தியசாலைக்கு முன்னால் திரண்ட மக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். சந்தேக நபருக்கு தமது கலாச்சார முறைகளின்படி தண்டனை வழங்க அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று […]