ஐரோப்பா

இத்தாலி நோக்கிச் சென்ற புலம்பெயர்ந்தோர் படகு விபத்து – 13 பேர் மாயம்

  • August 22, 2026
  • 0 Comments

இத்தாலியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த புலம்பெயர்ந்தோர் படகு ஒன்று துனிசியக் கடற்கரைக்கு அப்பால் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் குறைந்தத 13 துனியர்கள் காணாமல்போயுள்ளதுடன், இருவர் மட்டுமே மீட்கப்பட்டதாக புலம்பெயர்ந்தோர் உரிமைக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். குறித்த  துயரச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது. வியாழக்கிழமை அதிகாலையில் அந்தப் படகு புறப்பட்டது என்று துனிசிய மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தலைவர் முஸ்தபா அப்தெல்கெபிர் Mostafa Abdelkebir குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் உயிர் பிழைத்தவர்களில் இரண்டாவது நபரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். […]

இலங்கையில் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தீவிரமாகப் பரவிவந்த டெங்கு நோயின் தாக்கம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இலங்கை செய்தி

இலங்கையில் கட்டுப்பாட்டுக்குள் வந்தது ‘டெங்கு’

  • August 22, 2026
  • 0 Comments

இலங்கையில் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தீவிரமாகப் பரவிவந்த டெங்கு நோயின் தாக்கம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. குறிப்பிட்ட அவ்விரு மாதங்களிலும் நாளொன்றிற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகிவந்த நிலையில், தற்போது நாளாந்தம் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை 80 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் 21,533 பேரும், ஜூலை மாதத்தில் 29,964 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர். எனினும், ஆகஸ்ட் மாதத்தின் முதல் 20 நாட்களில் 8,043 நோயாளர்கள் மட்டுமே பதிவாகியுள்ளனர். தேசிய […]

கருத்து & பகுப்பாய்வு

06 மாதப் போர், கிடப்பில் போடப்பட்ட பேச்சுவார்த்தை : முடங்கும் பொருளாதாரம்

  • August 22, 2026
  • 0 Comments

அமெரிக்க – ஈரான் போர் ஆறு மாதங்களை நெருங்கிய நிலையில், இரு தரப்பினரும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபடவில்லை, ஆனால் சமாதானப் பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்கவில்லை. இதற்கிடையில், குறுகிய நீர்வழியைக் கடக்க முயற்சிக்கும் அங்கீகரிக்கப்படாத எண்ணெய் கப்பல்களைத் தாக்குவோம் என்று தெஹ்ரான் தனது செல்வாக்கைப் பற்றிக்கொண்டிருப்பதால், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் ஏற்றுமதி கிட்டத்தட்ட நின்றுவிட்டது என்றே சொல்ல வேண்டும். அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட், ஈரான் மீது “வரலாற்றிலேயே மிகக் கடுமையான தடைகளை” அறிவிப்பதாக உறுதியளித்தவாறே, திங்கட்கிழமை […]

ஆஸ்திரேலியா, சிட்னியில் யூதப் பண்டிகையின் போது 15 பேர் கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தலைநகரப் பகுதியும் ஆயுதங்களைச் செலுத்திப் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் (Gun buyback) திட்டத்தில் இணையவுள்ளதாகப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் (Anthony Albanese) சனிக்கிழமை தெரிவித்தார். செய்தி

ஆஸ்திரேலியாவில் தீவிரமடையும் ஆயுதப் பறிமுதல் நடவடிக்கை

  • August 22, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா, சிட்னியில் யூதப் பண்டிகையின் போது 15 பேர் கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தலைநகரப் பகுதியும் ஆயுதங்களைச் செலுத்திப் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் (Gun buyback) திட்டத்தில் இணையவுள்ளதாகப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் (Anthony Albanese) சனிக்கிழமை தெரிவித்தார். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகரான சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரையில் (Bondi Beach) கடந்த டிசம்பர் 14 ஆம் திகதி ஹனுக்கா (Hanukkah) கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கித் தாக்குதலைத் தொடர்ந்து, ஆயுதங்களைத் […]

சீனா உள்ளிட்ட ஈரானின் முக்கிய வர்த்தகப் பங்காளிகளைப் பாதிக்கும் வகையில், புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவும் ஈரானும் ஒன்றையொன்று எச்சரித்து உரையாடல்களை வெளியிட்டுள்ளன. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரான்மீது பொருளாதாரத் தடை: சீனாவிடம் அமெரிக்கா விடுத்துள்ள அவசர கோரிக்கை

  • August 22, 2026
  • 0 Comments

சீனா உள்ளிட்ட ஈரானின் முக்கிய வர்த்தகப் பங்காளிகளைப் பாதிக்கும் வகையில், புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவும் ஈரானும் ஒன்றையொன்று எச்சரித்து உரையாடல்களை வெளியிட்டுள்ளன. போர் தொடங்கப்பட்டு ஆறு மாதங்களை நெருங்கும் நிலையிலும், இரு தரப்பினருக்கும் இடையே எந்தவித அமைதிப் பேச்சுகளும் நடைபெறவில்லை. அதேவேளை, ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியிலான எண்ணெய் போக்குவரத்து முற்றாக முடங்கியுள்ளது. அனுமதியற்ற எண்ணெய் தாங்கிப் படகுகள் அந்த குறுகிய நீர்வழியைக் கடக்க முயன்றால் தாக்குதல் நடத்தப்படும் […]

நாடாளுமன்றத்தில் இருந்து தாம் விடைபெறுவதாகவும், இதுவே தனது இறுதி உரை என்றும் அர்ச்சுனா இராமநாதன் எம்.பி. தெரிவித்துள்ளார். இலங்கை செய்தி

நாடாளுமன்றில் இறுதி உரை: மன்னிப்பு கோரினார் அர்ச்சுனா

  • August 22, 2026
  • 0 Comments

நாடாளுமன்றத்தில் இருந்து தாம் விடைபெறுவதாகவும், இதுவே தனது இறுதி உரை என்றும் அர்ச்சுனா இராமநாதன் எம்.பி. தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (21) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்: “இது எனது இறுதி உரையாகும். நான் யாருக்காவது எப்போதாவது தவறு செய்துள்ளேனா? நான் எனது மக்களை நேசிக்கின்றேன். சிங்கள மக்களுக்கும் நான் ஆதரவானவன். இறுதியாக நான் முன்வைத்த ஒத்திவைப்பு வேளை பிரேரணையும் முஸ்லிம் மக்களுக்கானதே ஆகும். இந்த […]

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலமானது முன்னுரிமை அடிப்படையில் செய்யப்பட வேண்டிய ஒரு விடயம் அல்ல என்றும், இதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளே ஏற்படும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு மஹிந்த கடும் எதிர்ப்பு

  • August 22, 2026
  • 0 Comments

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலமானது முன்னுரிமை அடிப்படையில் செய்யப்பட வேண்டிய ஒரு விடயம் அல்ல என்றும், இதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளே ஏற்படும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: “அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தைக் கொண்டுவருவதை விடவும், மக்களுக்காக இந்த அரசாங்கம் செய்ய வேண்டிய பணிகள் பல உள்ளன. அந்தப் பணிகளை முதலில் […]

ஐரோப்பா

லண்டனில் நகைக் கடைக்குள் கொள்ளையடிக்க முயற்சி – சுரங்கம் தோண்டிய மூவர் கைது

  • August 21, 2026
  • 0 Comments

லண்டனில் உள்ள நகைக் கடை ஒன்றுக்குள் சுரங்கம் தோண்டி நுழைய முற்பட்ட மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் மூவரும் நகைகளை கொள்ளையடிக்க முயன்றதையும் ஒப்புக்கொண்டுள்ளனர். அதேநேரம் சுரங்கம் தோண்ட பயன்படுத்தும் கருவிகளையும் அவர்களிடம் இருந்து கைப்பற்றியதாக பெருநகர பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, பெருநகர பறக்கும் படையின் விசாரணையில், இந்தக் குழு லண்டன் முழுவதும் £700,000-க்கும் அதிகமான மதிப்புள்ள கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இதனைத் தொடர்ந்து மூவரும் கிங்ஸ்டன் கிரவுன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட […]

ஐரோப்பா

புலம்பெயர்தோரை இத்தாலிக்கு அனுப்ப திட்டமிடும் சுவீடன்

  • August 21, 2026
  • 0 Comments

ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, தற்போது சுவீடனும் புலம்பெயர்ந்தோரை இத்தாலிக்கு திருப்பி அனுப்ப திட்டமிட்டுள்ளது. மேலும் பல ஐரோப்பிய அரசாங்கங்கள், புலம்பெயர்ந்தவர்கள் மீளவும் இத்தாலிக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவித்து வருகின்றன. இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தின் புகலிடம் மற்றும் குடியேற்றம் தொடர்பான புதிய ஒப்பந்தத்தின்படி,  “நிர்ணயிக்கப்பட்ட விதிகளைப் பின்பற்ற” உத்தேசித்துள்ளதாகவும், இத்தாலி உட்பட “அனைத்து உறுப்பு நாடுகளும் தங்கள் கடமைகளை நிறைவேற்றும்” என்று எதிர்பார்ப்பதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது. ஸ்பெயினும் பிரான்சும் இதற்கு நேர்மாறான நிலைப்பாட்டை […]

ஐரோப்பா

ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரில் தாக்குதல் – 06 பேர் உயிரிழப்பு, 21 பேர் கவலைக்கிடம்

  • August 21, 2026
  • 0 Comments

மத்திய உக்ரைன் நகரமான கிரிவி ரிஹ்-இல் உள்ள வணிக வளாகம் ஒன்றின்மீது ரஷ்யா இன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 06 பேர் கொல்லப்பட்டதுடன், 90 பேர் காயமடைந்துள்ளனர். ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியின் சொந்த ஊரில் பகல் நேரத்தில் நடந்த இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்களில் ஆறு குழந்தைகளும் அடங்குவர் என்று பிராந்திய ஆளுநர் ஒலெக்சாண்டர் ஹன்ஷா Oleksandr Hanzha தெரிவித்துள்ளார். “ஒரு குழந்தை உட்பட இருபத்தொரு பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்,” என்றும்  அவர் கூறினார். தாக்குதல் தொடர்பில் […]