உலகம்

கனடாவில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் அமெரிக்காவில் வளிமாசடைவு

கனடாவில் ஏற்பட்ட நூற்றுக்கணக்கான காட்டுத்தீயிலிருந்து வெளியான அடர்த்தியான புகை, அமெரிக்காவின் மத்திய மேற்குப் பகுதி முதல் வடகிழக்குப் பகுதி வரையிலான பரந்த நிலப்பரப்பைச் சூழ்ந்துள்ளது.

இதனால் பொதுமக்கள் முடிந்தவரை வீட்டிற்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் அசுத்தமான காற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

IQAir என்ற கண்காணிப்பு நிறுவனத்தின்படி, டெட்ராய்ட்  (Detroit ) நகரம் உலகின் மிக மோசமான காற்றுத் தரத்தைக் கொண்டிருந்தது. அங்கு காற்றின் அளவு 600 ஆகப் பதிவானது.

இது, அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையால் “அபாயகரமானது” எனக் கருதப்படும் அளவை விட இரு மடங்கு அதிகமாகும்.

அதேநேரம் மினசோட்டா, மிச்சிகன், வடக்கு இல்லினாய்ஸ், வடக்கு ஓஹியோ மற்றும் ஒன்டாரியோ முழுவதும் அபாயகரமான அளவிலான புகை நிலவியதாக மத்திய அரசின் தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், இதயம் மற்றும் நுரையீரல் நோய், கர்ப்பிணிகள் அல்லது முதியவர்கள் போன்ற ஆபத்துக் காரணிகளைக் கொண்டவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்