செங்கடல் எண்ணெய் வழித்தடமும் மூடப்படும் அபாயம் – எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்வு
அமெரிக்கா தனது மின்சார உள்கட்டமைப்பைத் தாக்கினால், செங்கடல் எண்ணெய் வழித்தடத்தை மூடத் தயாராக இருக்குமாறு ஈரான் ஏமனிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து எண்ணெய் விலைகள் இன்று 01 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளன.
இதற்கமைய பிரென்ட் கச்சா எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்கள் பீப்பாய் ஒன்றுக்கு 88 சென்ட்கள், அதாவது 1.04 சதவீதம் உயர்ந்து $85.83 ஆக அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில், அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் எதிர்கால ஒப்பந்தங்கள் 94 சென்ட்கள் அதிகரித்து 1.18 சதவீதம் அதிகரித்து 80.54 டொலராக அதிகரித்துள்ளது.
“ஹோர்முஸ் மற்றும் பாப் எல்-மண்டேப் ( Bab el-Mandeb) ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் ஏற்படும் இடையூறுகள், விநியோகச் சங்கிலியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




