ஐரோப்பா

ஐரோப்பாவின் 12 நாடுகளில் பரவி வரும் வைரஸ் தொற்று – மக்களுக்கு எச்சரிக்கை

  • August 21, 2026
  • 0 Comments

ஐரோப்பாவில் உள்ள பன்னிரண்டு நாடுகளில் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. வைரஸ் பரவை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. நுளம்புகள் மூலம் பரவும் இந்த வைரஸ், காய்ச்சலைப் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும். ஆனால், தீவிரமான சந்தர்ப்பங்களில் இது நடுக்கம், காய்ச்சல், கோமா மற்றும் என்செபலைட்டிஸ் எனப்படும் மூளைத் திசுக்களின் அபாயகரமான வீக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இது மூளைக்காய்ச்சலையும் (மெனிஞ்சைடிஸ்) உண்டாக்கலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அல்பேனியா, […]

ஐரோப்பா

சொகுசு கப்பலில் பயணிக்கு நேர்ந்த துயரம் – தேடுதல் பணி தீவிரம்

  • August 21, 2026
  • 0 Comments

ஸ்காட்லாந்து கடற்கரைக்கு அப்பால் பயணித்த சொகுசு கப்பலில் இருந்து சுற்றுலாப் பயணி ஒருவர் தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எம்.எஸ். ஆம்பிஷன் MS Ambition, கப்பலில் இருந்த பயணி ஒருவரே இவ்வாறு விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அம்பாசிடர் குரூஸ் லைன் The Ambassador Cruise Line  நிறுவனத்தின் அந்தக் கப்பல், 2026 சூரிய கிரகண உல்லாசப் பயணத்தின் ஒரு பகுதியாக லெர்விக்கில் Lerwick இருந்து டண்டீக்குச் Dundee சென்று கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போன பயணியைத் தேடும் பணிகளை HM […]

ஐரோப்பா

சுவீடனில் உயர்நிலைப் பாடசாலையில் வாள்வெட்டு

  • August 21, 2026
  • 0 Comments

சுவீடனின் ஃபாகர்ஸ்டாவில் Fagersta உயர்நிலைப் பாடசாலையில் இன்று இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரின் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பொலிஸார் சம்பவ இடத்தை சுற்றிவளைத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நீதித்துறை அமைச்சர் குன்னார் ஸ்ட்ரோமர் உறுதிப்படுத்தினார்.

ஐரோப்பா

UK வில் புலம்பெயர்ந்தோருக்காக 40 மில்லியன் செலவு

  • August 21, 2026
  • 0 Comments

பிரித்தானியாவை விட்டு தன்னார்வமாக வெளியேறும் புலம்பெயர்ந்தோருக்கு £3,000 பவுண்ட்ஸ் வரை உதவித் தொகை வழங்கும்  திட்டத்திற்காக  தொழிலாளர் கட்சி கிட்டத்தட்ட £40 மில்லியனைச் செலவிட்டுள்ளது. ஜூலை 2024 இல்  ஆட்சிக்கு வந்ததிலிருந்து, தொழிலாளர் கட்சி இந்தத் திட்டத்தை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளது. மார்ச் மாதத்திற்குள் 17,346 புலம்பெயர்ந்தோர் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. ஒரு கட்டாயத் திருப்பி அனுப்புதலுக்கு £48,000 மற்றும் ஒரு புகலிட விடுதியில் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு £158,000 செலவாகும் நிலையில், ஒரு தன்னார்வத் […]

இராணுவ உறவுகளை வலுப்படுத்தவும், கனிம வளங்கள், ஆற்றல் (சக்தி) மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இணைந்து செயல்படவும் சீனாவும் இந்தோனேசியாவும் இணங்கியுள்ளன. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பாதுகாப்பு உறவை பலப்படுத்த இந்தோனேஷியா, சீனா இணக்கம்

  • August 21, 2026
  • 0 Comments

இராணுவ உறவுகளை வலுப்படுத்தவும், கனிம வளங்கள், ஆற்றல் (சக்தி) மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இணைந்து செயல்படவும் சீனாவும் இந்தோனேசியாவும் இணங்கியுள்ளன. தென்சீனக் கடலில் நிலவும் பதற்றங்கள், சர்வதேசப் பொருளாதார மற்றும் பூகோள-அரசியல் சவால்களுக்கு மத்தியிலேயே இவ்வாறு இணக்கம் எட்டப்பட்டுள்ளது. இந்தோனேசியத் தலைநகர் ஜகார்தாவிற்கு விஜயம் மேற்கொண்ட சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் டொங் ஜுன் ஆகியோர், இந்தோனேசியாவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். சந்திப்பின் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

யூடியூப் தளத்தின் விசேட அறிவிப்பு – பொதுப் பார்வைகளின் எண்ணிக்கையைக் கணக்கிடும் முறையில் மாற்றம்

  • August 21, 2026
  • 0 Comments

யூடியூப் தளம்  தனது வீடியோக்களுக்கான பொதுப் பார்வைகளின் எண்ணிக்கையைக் கணக்கிடும் முறையை மாற்றுவதாக அறிவித்துள்ளது. தங்கள் வீடியோக்கள் எவ்வாறு செயல்பட்டுள்ளன என்பதை உருவாக்குநர்கள் மதிப்பிடும் அளவீடுகளைச் சீரமைக்கும் முயற்சியாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இம் முயற்சியானது ஆகஸ்ட் 24 முதல்,  நடைமுறைக்கு வரும். வீடியோ இயங்கத் தொடங்கும் கணத்திலிருந்தே பார்வைகள் கணக்கிடப்படும். கூகிள் ஊழியர் ஒருவர் யூடியூப் உதவிப் பக்கத்தில் இந்த அறிவிப்பை உறுதிப்படுத்தினார். மேலும், இந்த மாற்றம் உருவாக்குநர்களின் வருமானத்தையோ அல்லது அவர்கள் யூடியூப் பார்ட்னர் […]

இலங்கை

ஜுலையில் பணவீக்கம் அதிகரிப்பு

  • August 21, 2026
  • 0 Comments

நாட்டின் நுகர்வோர் விலைக் குறியீடு மற்றும் மாதாந்திர நுகர்வோர் பணவீக்க விகிதத்தின்படி, ஜூலை மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. அதன்படி, நாட்டில் ஜூன் மாதத்தில் 6.5% ஆகப் பதிவான பணவீக்க விகிதம், ஜூலை மாதத்தில் 7.2% ஆக அதிகரித்துள்ளது என்று மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் துறை தெரிவித்துள்ளது. மேலும், ஜூன் மாதத்தில் 3.3% ஆகப் பதிவான உணவுப் பொருட்களின் பணவீக்க விகிதம், ஜூலை மாதத்தில் 4.9% ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில், ஜூன் மாதத்தில் 9.3% ஆக இருந்த […]

தமது நாட்டு பிரதமர் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளாரென இந்திய ஊடகங்கள் வெளியிட்ட செய்தியை பங்களாதேஷ் நிராகரித்துள்ளது. இந்தியா உலகம் செய்தி

பிரதமரின் டெல்லி விஜயம்: இந்திய ஊடகங்களின் செய்தியை நிராகரித்தது பங்களாதேஷ்

  • August 21, 2026
  • 0 Comments

தமது நாட்டு பிரதமர் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளாரென இந்திய ஊடகங்கள் வெளியிட்ட செய்தியை பங்களாதேஷ் நிராகரித்துள்ளது. ஆகஸ்ட் 23 முதல் 25 வரையிலான திகதிகளில் பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான் டெல்லிக்கு விஜயம் செய்வார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதை அடுத்து, இரு நாடுகளுக்குமிடையே ஏற்பட்ட விரிசலைச் சரிசெய்யும் முயற்சியாக, கடந்த பெப்ரவரி மாதம் பதவியேற்ற தாரிக் ரஹ்மானின் முதலாவது டெல்லி […]

வடக்கு மாகாணத்தில் மக்களின் மீள்குடியேற்றம், வாழ்வாதார மேம்பாடு மற்றும் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுற்றுலாத்துறை (Tourism) சார்ந்த அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஏதுவாக, கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை மேலும் துரிதப்படுத்த வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அறிவுறுத்தினார். இலங்கை செய்தி

கண்ணிவெடி அகற்றல் பணியை துரிதப்படுத்துமாறு வடக்கு ஆளுநர் பணிப்பு

  • August 21, 2026
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் மக்களின் மீள்குடியேற்றம், வாழ்வாதார மேம்பாடு மற்றும் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுற்றுலாத்துறை (Tourism) சார்ந்த அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஏதுவாக, கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை மேலும் துரிதப்படுத்த வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அறிவுறுத்தினார். வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் மற்றும் அவற்றின் தற்போதைய முன்னேற்ற நிலைமைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், ஆளுநர் தலைமையில் இன்று (21.08.2026) வெள்ளிக்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. […]

தனது அமெரிக்கப் பயணத்திற்கு இந்திய மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதாக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியா செய்தி

தெலுங்கானா முதல்வருக்கு அமெரிக்கா செல்ல அனுமதி மறுப்பு

  • August 21, 2026
  • 0 Comments

தனது அமெரிக்கப் பயணத்திற்கு இந்திய மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதாக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். தற்போது லண்டனில் உள்ள ரேவந்த் ரெட்டி, அங்கிருந்து அமெரிக்காவின் பாஸ்டன் நகருக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார். அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு வரும் ஆகஸ்ட் 30-ஆம் திகதி அவர் ஹைதராபாத் திரும்புவதாக இருந்தது. இந்நிலையில், ரேவந்த் ரெட்டியின் அமெரிக்கப் பயணத்திற்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதால், அவர் ஆகஸ்ட் 23-ஆம் திகதியே லண்டனில் இருந்து ஹைதராபாத் திரும்பவுள்ளதாகத் தெலங்கானா […]