இலங்கை செய்தி

அர்ச்சுனா எம்.பியை கரடியுடன் ஒப்பிட்ட அமைச்சர்

"கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் இருப்புத் தொடர்பில் நாம் கூடுதல் கவனம் செலுத்துவோம்; அம்மாவட்டத்தைக் கைவிட மாட்டோம்.

“கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் இருப்புத் தொடர்பில் நாம் கூடுதல் கவனம் செலுத்துவோம்; அம்மாவட்டத்தைக் கைவிட மாட்டோம்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் மீண்டும் விரைவில் நடைபெறும்” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவின் கேடுகெட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதற்கு இன்றைய சம்பவமே மற்றுமொரு சான்றாகும் எனவும் அமைச்சர் கூறினார்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் இன்று ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:

“கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் மிகவும் அமைதியான முறையிலேயே நடைபெற்று வந்தது. இந்நிலையில், சிவபூசையில் கரடி புகுந்தது போல, ஒரு கரடி புகுந்து பைத்தியக்காரத்தனமாக விளையாடி, குழப்பத்தை விளைவித்துக் கூட்டத்தை இடைநிறுத்தியது.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தொடர்ச்சியாக எல்லாக் கூட்டங்களுக்கும் சென்று குழப்பம் விளைவித்து வருகின்றார்; அதிகாரிகள் மீது அபாண்டமாகப் பழி சுமத்தி வருகின்றார்.

அபிவிருத்திக் குழுக்கூட்டத்தைப் பயன்படுத்தி அதிகாரிகள் மீது அபாண்டமாகப் பழி சுமத்தக் கூடாது. அவ்வாறு செய்தால், அந்த அதிகாரிகளால் சமூகத்தின் முன் செல்ல முடியாத நிலை ஏற்படும்.

அர்ச்சுனாவின் இத்தகைய கேடுகெட்ட நடவடிக்கைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கு இன்றைய கூட்டமே சாட்சியாகும்.

கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னேற்றம் மற்றும் இருப்புத் தொடர்பில் நாம் அவதானம் செலுத்துவோம். அடுத்து வரும் நாட்களில் மீண்டும் அபிவிருத்திக் குழு கூடும்; அப்போது உறுதியான முடிவு எடுக்கப்படும்” என்றார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை