ஆஸ்திரேலியா இந்தியா செய்தி

நாளை ஆஸ்திரேலியா செல்கிறார் மோடி – பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நாளை (08) ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நாளை (08) ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார்.

இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்குரிய பயணத்தை பிரதமர் மோடி நேற்று ஆரம்பித்தார்.

முதற்கட்டமாக இந்தோனேசியா சென்றுள்ள மோடி, அங்கிருந்து ஆஸ்திரேலியா வரவுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் வாழும் இந்திய சமுகத்தினர், நாளை வியாழக்கிழமை மெல்போர்னுக்கு வரவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியை பிரம்மாண்டமான பாலிவுட் பாணி நிகழ்வோடு வரவேற்க தயாராகி வருகின்றனர்.

ஆஸ்திரேலியா-இந்தியா வருடாந்திர தலைவர்கள் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக இந்தியப் பிரதமர் ஜூலை 8 முதல் 10 வரை ஆஸ்திரேலியாவிற்குப் பயணம் மேற்கொள்கிறார்.

வியாழக்கிழமையன்று, அவரும் ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸும் டாக்லேண்ட்ஸ் மைதானத்தில் (Docklands Stadium) முழுமையாக முன்பதிவு செய்யப்பட்ட ‘மெல்போர்ன் மீட்ஸ் மோடி’ (Melbourne Meets Modi) நிகழ்வில் ஒன்றாகத் தோன்றவுள்ளனர்.

மோடி 2014-ல் மெல்போர்னுக்கும் சென்றிருந்தார், ஆனால் ஆஸ்திரேலியாவிலேயே அதிகப்படியான இந்திய மக்கள் தொகையைக் கொண்ட இந்த நகரத்தில் இப்படிப்பட்ட ஒரு பெரும் கூடல் நடப்பது இதுவே முதல் முறையாகும்.

எந்தவொரு பாலிவுட் தயாரிப்புக்கும் சவால் விடும் வகையில் வண்ணம், ஆடம்பரம், சம்பிரதாயம் மற்றும் இசையுடன் கூடிய இரண்டு மணி நேர மெல்போர்ன் நிகழ்ச்சி, இந்தியத் துணைக் கண்டத்தின் கலாச்சாரத்தின் நீள அகலங்களை (பல்வகைமையை) வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சுமார் 600 தன்னார்வலர்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைக்க உதவியுள்ளனர் என்றும், அவர்கள் 30,000-க்கும் மேற்பட்ட தன்னார்வ மணிநேரங்களை இதற்காகச் செலவிட்டுள்ளனர் என்றும் ஏற்பாட்டாளர் அகர்வால் கூறினார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி