ஐரோப்பா

ஸ்கொட்லாந்தில் மலிவு விலை போக்குவரத்து கட்டணங்கள் அறிமுகம்

  • September 7, 2026
  • 0 Comments

ஸ்கொட்லாந்தில் போக்குவரத்து கட்டணங்கள் 02 பவுண்ட்ஸாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்தை “சமூகங்களுக்கு மேலும் மலிவானதாக” மாற்றும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த புதிய மலிவு விலைத் திட்டம் கிளாஸ்கோ Glasgow, அயர்ஷயர் Ayrshire, இன்வர்க்லைட் Inverclyde, லனார்க்ஷயர் Lanarkshire, ரென்ஃப்ரூஷயர் Renfrewshire மற்றும் டன்பார்டன்ஷயர் Dunbartonshire  ஆகிய பகுதிகளுக்கு பொருந்தும். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள முதலமைச்சர் ஜோன் ஸ்வின்னி John Swinney, இந்த திட்டத்தின் மூலம் அதிகமான மக்கள் தங்கள் கைகளில் […]

உலகம்

ஜப்பான் முழுவதும் கனமழை – மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

  • September 7, 2026
  • 0 Comments

ஜப்பான் முழுவதும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஃபுகுஷிமா மாகாணத்தின் இவாக்கி பகுதியில் உள்ள ஒரு சுரங்கப்பாதையில் கார் ஒன்று மூழ்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதேநேரம் டோக்கியோவின் தெற்கே உள்ள நிஜிமாவில் Niijima, 24 மணி நேரத்திற்குள் 485 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஜப்பான் வானிலை அலுவலகம் இசு தீவுத் தொடரின் சில பகுதிகளுக்கு மிக உயர்ந்த மண்சரிவு அபாய எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளது. மேலும் கனமழை காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன், […]

ஐரோப்பா

பிரித்தானியர்களுக்கு சிக்கல் – ஊழியர்களை குறைக்கும் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம்

  • September 7, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர், ஆட்குறைப்பு அல்லது ஊழியர் குறைப்பு  குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கமைய  அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலகளவில் சுமார் 4,000 வேலைகளைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 1.7 பில்லியன் பவுண்டுகளைச் சேமிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அந்நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகள் பெரும்பாலும் அலுவலகம் சார்ந்த மற்றும் நிர்வாகப் பதவிகளைப் பாதிக்கும். இவை பெரும்பாலும் பிரித்தானியர்களை குறிவைத்தே மேற்கொள்ளப்படலாம் எனவும் […]

உலகம்

கொழும்பு  மற்றும் ஜகார்தாவிற்கு இடையிலான விமான சேவைகள் இரத்து

  • September 7, 2026
  • 0 Comments

கொழும்பு  மற்றும் ஜகார்தாவிற்கு இடையிலான விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தோனேசியாவில் உள்ள அனக் கிரகடாவ் எரிமலை வெடித்துள்ள நிலையில், கரும்புகை காற்றில் பரவி  விமான போக்குவரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கொழும்பிலிருந்து ஜகார்த்தா செல்லும் UL 364 விமானமும், ஜகார்த்தாவிலிருந்து கொழும்பு செல்லும் UL 365 விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. இதற்கிடையில், வளிமண்டலத்தில் நுழையும் எரிமலைச் சாம்பல் மற்றும் சிலிக்கா நிறைந்த பாறைத் துண்டுகள் விமானங்களின் இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு […]

உலகம்

அமெரிக்காவில் ICE முகவர்களின் கீழ் இடம்பெறும் மரணங்கள் தொடர்பில் ஐ.நா சபை அவதானம்

  • September 7, 2026
  • 0 Comments

அமெரிக்க குடிவரவுத் துறையினரின் கட்டுப்பாட்டில் இடம்பெறும் மரணங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறுமாறு, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தலைவர் இன்று வலியுறுத்தினார். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் உரையாற்றிய வோல்கர் டர்க் Volker Turk, “ஜூன் மாதத்திற்கு பிறகு, அமெரிக்கக் குடிவரவுக் காவலில் மேலும் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார். அதன்படி, “2026-ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் 23 மரணங்கள் நிகழ்ந்துள்ளன” என்று கூறிய அவர், “இந்த மரணங்களுக்குப் பொறுப்புக்கூறல் இருக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார். அமெரிக்க […]

ஐரோப்பா

பிரான்ஸின் ஒயின் உற்பத்தி 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி

  • September 7, 2026
  • 0 Comments

பிரான்சின் ஒயின் உற்பத்தி கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்தாலிக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளரான பிரான்ஸ், 33.9 மில்லியன் ஹெக்டோலிட்டர்களை  உற்பத்தி செய்யும் என இவ்வாண்டின் ஆரம்பத்தில் கணித்திருந்தது. இது 2025 ஆம் ஆண்டை விட 6 சதவீதம் குறைவாகவும், 2021 முதல் 2025 வரையிலான காலக்கட்டத்தில், சராசரியை விட 17 சதவீதம் குறைவாகவும் இருக்கும். ஒரு ஹெக்டோலிட்டர் என்பது 100 […]

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், உலகின் முதல்நிலை வீராங்கனையான அரினா சபலென்கா (Aryna Sabalenka), அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்டை (Taylor Townsend) வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். செய்தி விளையாட்டு

சவால்களை முறியடித்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் Sabalenka

  • September 7, 2026
  • 0 Comments

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், உலகின் முதல்நிலை வீராங்கனையான அரினா சபலென்கா (Aryna Sabalenka), அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்டை (Taylor Townsend) வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப்போட்டியின் தொடக்கத்தில் சபலென்கா தனது சர்வீஸ்களைத் தக்கவைக்கச் சற்று சிரமப்பட்டார். நடப்பு சாம்பியனான சபலென்காவின் முதல் நான்கு சர்வீஸ் கேம்களில் மூன்றை உடைத்து (Break) டவுன்சென்ட் அதிர்ச்சித் திருப்பத்தை ஏற்படுத்த முயன்றார். இருப்பினும், விரைவாகத் தனது இயல்பு ஆட்டத்திற்குத் திரும்பிய சபலென்கா […]

அஸ்ஸாம் மாநிலம் கௌஹாத்தியில் திருமணம் முடிந்து சில மாதங்களே ஆன 25 வயதுப் பெண் ஒருவர், தனது குடியிருப்பில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுச் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா செய்தி

மனைவியை கொலை செய்து உடலைத் துண்டித்த கணவர் சரணடைவு

  • September 7, 2026
  • 0 Comments

அஸ்ஸாம் மாநிலம் கௌஹாத்தியில் திருமணம் முடிந்து சில மாதங்களே ஆன 25 வயதுப் பெண் ஒருவர், தனது குடியிருப்பில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுச் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகத் தலைமறைவாகியிருந்த பெண்ணின் கணவர் பொலிஸில் சரணடைந்துள்ளார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 06), குறித்த தம்பதியினர் வசித்து வந்த குடியிருப்பிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அண்டை வீட்டார்கள் அளித்த புகாரின் பேரில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கடந்த இரண்டு நாட்களாகத் […]

உலகம்

வளைகுடாவில் புதிய கட்டுப்பாட்டு மண்டலத்தை நிறுவும் ஈரான்

  • September 7, 2026
  • 0 Comments

எதிர்வரும் நாட்களில் வளைகுடாவில் ஒரு புதிய கட்டுப்பாட்டு மண்டலத்தையும், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக  புதிய கப்பல் வழித்தடத்திற்கான வரைபடங்களையும் அறிவிக்கப்போவதாக ஈரான் கூறியுள்ளது. புதிய கட்டுப்பாட்டு மண்டலம், ஈரான் மீதான அமெரிக்கத் தடை தொடங்கும் இடத்திலிருந்து தொடங்கி வளைகுடாவின் பிற பகுதிகளுக்கும் விரிவடையும் என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் செயலாளர் மொஹ்சென் ரெஸாயி Mohsen Rezaei , நேற்று இந்த தகவலை வெளியிட்டார். இந்தத் திட்டம் குறித்த விவரங்கள் குறைவாகவே வழங்கப்பட்டுள்ளன. ஆனால் […]

ரஷ்யாவின் வட காகசஸ் (North Caucasus) பிராந்தியத்தில் உள்ள கபார்டினோ-பல்கேரியா (Kabardino-Balkaria) பகுதியில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி குறைந்தது 11 மலையேற்ற வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அவசர கால சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ரஷ்யாவின் காகசஸ் மலைப்பகுதியில் பனிச்சரிவு: 11 பேர் பலி

  • September 7, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் வட காகசஸ் (North Caucasus) பிராந்தியத்தில் உள்ள கபார்டினோ-பல்கேரியா (Kabardino-Balkaria) பகுதியில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி குறைந்தது 11 மலையேற்ற வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அவசர கால சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 5.00 மணியளவில், வட காகசஸ் பிராந்தியத்தின் மிக உயர்ந்த சிகரங்களில் ஒன்றான மிஷிர்ஜி மலையில் (Mount Mizhirgi) 33 பேர் கொண்ட மலையேற்றக் குழுவினர் பயணித்துக்கொண்டிருந்தபோது திடீரென இந்த பனிச்சரிவு ஏற்பட்டது. […]