ஸ்கொட்லாந்தில் மலிவு விலை போக்குவரத்து கட்டணங்கள் அறிமுகம்
ஸ்கொட்லாந்தில் போக்குவரத்து கட்டணங்கள் 02 பவுண்ட்ஸாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்தை “சமூகங்களுக்கு மேலும் மலிவானதாக” மாற்றும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த புதிய மலிவு விலைத் திட்டம் கிளாஸ்கோ Glasgow, அயர்ஷயர் Ayrshire, இன்வர்க்லைட் Inverclyde, லனார்க்ஷயர் Lanarkshire, ரென்ஃப்ரூஷயர் Renfrewshire மற்றும் டன்பார்டன்ஷயர் Dunbartonshire ஆகிய பகுதிகளுக்கு பொருந்தும்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள முதலமைச்சர் ஜோன் ஸ்வின்னி John Swinney, இந்த திட்டத்தின் மூலம் அதிகமான மக்கள் தங்கள் கைகளில் அதிகப் பணத்துடன் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல முடியும் . இது வாழ்க்கைச் செலவு நெருக்கடியின் போது மக்கள் பணத்தைச் சேமிக்க உதவும் எனக் கூறினார்.
இதேவேளை ஸ்காட்லாந்து போக்குவரத்துத் துறையின்படி, உங்கள் பயணக் கட்டண உச்சவரம்பு பகுதிக்குள் தொடங்கி முடிந்தால், தகுதியான ஒருவழிப் பயணத்திற்கு நீங்கள் £2 பவுண்ட்ஸுக்கு மேல் செலுத்தத் தேவையில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.




