ஐரோப்பா

பிரித்தானியர்களுக்கு சிக்கல் – ஊழியர்களை குறைக்கும் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம்

பிரித்தானியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர், ஆட்குறைப்பு அல்லது ஊழியர் குறைப்பு  குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய  அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலகளவில் சுமார் 4,000 வேலைகளைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

1.7 பில்லியன் பவுண்டுகளைச் சேமிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அந்நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளது.

இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகள் பெரும்பாலும் அலுவலகம் சார்ந்த மற்றும் நிர்வாகப் பதவிகளைப் பாதிக்கும். இவை பெரும்பாலும் பிரித்தானியர்களை குறிவைத்தே மேற்கொள்ளப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் சுமார் 34000 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இணையவழித் தாக்குதலில் இருந்து மீள்வது, அதிகரித்து வரும் செயல்பாட்டுச் செலவுகள், மலிவான சீன மின்சார வாகனங்களால் ஏற்படும் சந்தை அழுத்தம், மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த வரிகள் உள்ளிட்ட பல சவால்களை இந்நிறுவனம் எதிர்கொண்டு வருகின்ற  நிலையில்  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்