உலகம்

தைவான் ஜலசந்தியில் ஏற்படும் மோதல் – 02ஆம் உலகப் போரை விட பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்

தைவான் நீரிணைப் பகுதியில் ஏற்படும் எந்தவொரு மோதலும் இரண்டாம் உலகப் போரை விட உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று  அமெரிக்க இராஜதந்திரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தாய்பே நகரில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கு ஒன்றில் பேசிய, தைவானில் உள்ள அமெரிக்க நிறுவனத்தின் (American Institute in Taiwan) இயக்குனர் ரேமண்ட் கிரீன், இன்று இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

வரவிருக்கும் அமெரிக்க-சீன உச்சிமாநாடு  தகவறான கணிப்புகளை தவிர்க்க உதவும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தைவான் நீரிணையில் அமைதியை நிலைநாட்டுவதை விட காலத்திற்கேற்ற அல்லது முக்கியமான வேறெந்த விஷயமும் இல்லை என்றும் அவர் இதன்போது கூறியுள்ளார்.

ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியைப் பாதுகாப்பதை அமெரிக்கா தனது மிக முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகக் கொண்டுள்ளது,” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்