உள்ளக பொறிமுறையே இலங்கையின் இலக்கு: வெளிவிவகார அமைச்சர் திட்டவட்டம்
பொறுப்புகூறல் விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் தேசிய பொறிமுறையைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்:
“தேசிய பொறிமுறை தற்பொழுது முறைப்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாகவே பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு வருகிறது. அத்துடன், காணிகள் விடுவிக்கப்பட்டு வருவதுடன், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நாட்டில் இனவாத மற்றும் மதவாதப் பிரச்சினைகள் எதுவும் இடம்பெறவில்லை” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.




