ஐரோப்பா

மன்னரின் ஆணை தொடர்பில் ஹாரி மற்றும் மேகன் தம்பதியினருக்கு அறிவிக்கப்பட்டதா?

இங்கிலாந்துக்குத் திரும்பியதைத் தொடர்ந்து, சசெக்ஸ் கோமகனும் கோமகியும் தனிப்பட்ட, அரச குடும்பப் பணிகளில் ஈடுபடாத உறுப்பினர்களாகவே தொடர்வார்கள் என்பதை வலியுறத்தி மன்னர் சார்லஸ் ஆணையொன்றை எழுதியுள்ளார்.

அரச உதவியாளர் லார்ட் பென்யனால் அரசாங்கத் துறைகள் மற்றும் இராணுவத்திற்கு அனுப்பப்பட்ட இந்த வழிகாட்டுதல், ஹாரி மற்றும் மேகனுக்கு எந்தவொரு அதிகாரப்பூர்வமான அரசு அல்லது அரச கடமைகளும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

இந்தக் கடிதம் பொதுவெளியில் வெளியிடப்படுவதற்கு முன்பு தம்பதியினருக்குத் தெரிவிக்கப்பட்டது என்று அரச குடும்ப வட்டாரங்கள் கூறியபோதிலும், அது குறித்து தங்களுக்கு முன் அறிவிப்பு வராதது குறித்து சசெக்ஸ் தம்பதியினரின் செய்தித் தொடர்பாளர் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த குடும்பம் ஆகஸ்ட் 26 அன்று இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்தது.

அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் மறு ஆய்வு செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்