உலகம்

கொரிய எல்லையில் பதற்றம் – தென்கொரியாவை ஊடுருவும் வடகொரியா

வட மற்றம் தென்கொரியாவை  பிரிக்கும் இராணுவ எல்லைக் கோட்டைத் தாண்டி வட கொரியப் படைகள் ஊடுருவுவது உள்ளிட்ட செயற்பாடுகளை கண்காணித்து வருவதாக  தென்கொரிய இராணுவம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் பதிலடி கொடுக்க தேவையான  , உறுதியான இராணுவத் தயார்நிலையில்  இருப்பதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் வட கொரியப் படைகள் இராணுவ எல்லைக் கோட்டை 20 முறைகளுக்கும் மேலாக கடந்து சென்றுள்ளதாக ‘சோசுன் இல்போ’ (Chosun Ilbo) நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த செய்திக்கு இராணுவம் இன்று பதிலளித்துள்ள நிலையில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சோசுன் இல்போ’ (Chosun Ilbo)  வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் வடகொரிய படைகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளதாகவும், எல்லைக்கு அருகில் கண்ணிவெடிகளைப் பதித்தல் மற்றும் வேலி அமைத்தல் உள்ளிட்ட அரண் அமைக்கும் பணிகளை அவர்கள் மேற்கொண்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், எல்லைக் கடப்பு நிகழ்வுகளின் எண்ணிக்கை, இடங்கள் அல்லது நேரம் குறித்த விவரங்களை அச் செய்தித்தாள்  வெளியிடவில்லை.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்