உலகம்

இஸ்லாமிக் ஸ்டேட் அமைப்புக்கு ஆதரவு – அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்படும் பெண்

  • September 12, 2026
  • 0 Comments

‘இஸ்லாமிக் ஸ்டேட்’ (Islamic State) அமைப்புக்கு ஆதரவளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆப்கானிஸ்தான் பெண் ஒருவர் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு “அந்நிய பயங்கரவாதிகளை” (alien terrorists) வெளியேற்றுவதற்காக உருவாக்கப்பட்ட, அதிகம் அறியப்படாத நீதிமன்றத்தின் மூலம் அவர் வெளியேற்றப்பட்டுள்ளார். குறித்த நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட முதல் வழக்கு இதுவாகும். டெக்சாஸில் சட்டப்பூர்வ நிரந்தரக் குடியேறியாக வசித்து வந்த 47 வயதான நசிரா ஹாஜி ஜாதா (Nazira Haji Zada), ஜூலை மாதம் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, […]

ஐரோப்பா

பிரான்ஸில் ரயில் தடம் புரண்டு விபத்து – 44 பேர் காயம்

  • September 12, 2026
  • 0 Comments

பிரான்ஸின் நார்மண்டி பகுதியில் உள்ள ரூவன் (Rouen) மற்றும் கேன் (Caen) நகரங்களுக்கு இடையே ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 44 பேர் காயமடைந்ததாக பிரெஞ்சு அதிகாரிகளும் ரயில்வே நிர்வாகமும் தெரிவித்துள்ளன. காயமடைந்தவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், அவர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் உள்ளூர் நிர்வாகத் தலைவரான ஜீன்-பெனாய்ட் ஆல்பர்டினி Jean-Benoit Albertini தெரிவித்துள்ளார். அடையாளம் தெரியாத ஒரு பொருளின் மீது மோதியதாலேயே ரயில் தடம் புரண்டதாக பிரெஞ்சு காவல் துறை […]

உலகம்

கட்டுக்கடங்காமல் பரவும் எபோலா தொற்று – 7000ஐக் கடந்தது

  • September 12, 2026
  • 0 Comments

காங்கோ ஜனநாயகக் குடியரசில் உறுதிப்படுத்தப்பட்ட எபோலா பாதிப்புகளின் எண்ணிக்கை 7,000-ஐக் கடந்துள்ளதாகவும், வைரஸ் தொற்று புதிய மாகாணம் ஒன்றுக்கும் பரவியுள்ளதாகவும் தற்போது வெளியாகியுள்ள புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. எபோலாவின் ‘புண்டிபுக்யோ’ (Bundibugyo) வகையால் ஏற்பட்ட தொற்று பரவல், காங்கோ வரலாற்றிலேயே மிகப்பெரிய மற்றும் மிக மோசமான உயிரிழப்புகளை ஏற்படுத்திய பரவலாக மாறியுள்ளது. கடந்த 2014-2016 காலகட்டத்தில், கினியா, லைபீரியா மற்றும் சியரா லியோன் ஆகிய நாடுகளில் 28,600-க்கும் மேற்பட்டோர் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதுடன், சுமார் 11000  […]

உலகம்

ஈராக்கில் இருந்து ஏவப்படும் ட்ரோன்கள் – சவுதியின் குழாய் வழித்தடம் பாதிப்பு

  • September 12, 2026
  • 0 Comments

ஈராக்கிலிருந்து ஏவப்பட்ட ட்ரோன்களால் கிழக்கு-மேற்கு’ (East–West) குழாய் வழித்தடம் தாக்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா நேற்று அறிவித்துள்ளது. “ஈராக்கிலிருந்து வந்த பல ட்ரோன்கள் ரியாத் மற்றும் மதீனா பகுதிகளில் உள்ள கிழக்கு-மேற்கு குழாய் வழித்தடத்தை குறிவைத்துத் தாக்கியதாகவும் இந்த தாக்குதலில் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் குழாய் வழித்தடத்தின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஈராக் ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு அமைய பதில் தாக்குதல்கள் நடத்தப்படவில்லை என்றும், அப்பகுதியில் இருந்து வரும் தாக்குதல்களை தடுக்க அந்நாட்டு […]

ஐரோப்பா

ஒன்ராறியோவின் முதல் AI இணை அமைச்சராக விஜய் தணிகாசலம் நியமனம்

  • September 11, 2026
  • 0 Comments

ஒன்ராறியோவின் முதலாவது செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டுத் துறைக்கான இணை அமைச்சராக விஜய் தணிகாசலம் நியமிக்கப்பட்டுள்ளார். ஒன்ராறியோ முதல்வர்  டக் ஃபோர்டினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. விஜய் தணிகாசலம்  2018ஆம் ஆண்டில் இருந்து மூன்றாவது முறையாக ஸ்கார்பரோ-ரூஜ் பார்க் தொகுதியின் ஒன்ராறியோ சட்டமன்ற உறுப்பினராகப்  பணியாற்றி வருகிறார். அத்துடன்  2023ஆம் ஆண்டில்  ஒன்ராறியோவில் அமைச்சரவைப் பதவியை வகித்த முதல் தமிழ் அரசியல்வாதி என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அவர் முன்னதாக 2023ஆம் ஆண்டில் போக்குவரத்துக்கான இணை அமைச்சராகவும், 2024ஆம் ஆண்டில் […]

ஐரோப்பா

நோர்வே அரசக் குடும்பத்தில் மற்றுமொரு மரணம்

  • September 11, 2026
  • 0 Comments

நோர்வேயின் இளவரசி ஆஸ்ட்ரிட் Astrid   தனது 94 ஆவது வயதில் காலமானார். தனது சகோதரரும் மறைந்தவருமான ஐந்தாம் ஹரால்ட் மன்னரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட சில நாட்களுக்குப் பிறகு, அவர் உயிரிழந்துள்ளார். ஐந்தாம் ஹரால்ட் மன்னர், 35 ஆண்டு கால ஆட்சிக்குப் பிறகு கடந்த மாதம் தனது 89வது வயதில் காலமானார். அவருக்குப் பிறகு அவரது மகன் எட்டாம் ஹாக்கான் மன்னராகப் பதவியேற்றார்.  

ஐரோப்பா

துருப்புக்களுக்கு பற்றாக்குறை – 10 இலட்சம் வீரர்களை அணிதிரட்டுமாறு புட்டினிடம் வலியுறுத்தல்

  • September 11, 2026
  • 0 Comments

போர்களத்தில் துருப்புக்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 10 லட்சம் வீரர்களைக் கட்டாய ராணுவச் சேவையில் ஈடுபடுத்துமாறு விளாடிமிர் புடினின் தளபதிகள் அவரை வலியுறுத்தி வருகின்றனர். 2028-ஆம் ஆண்டிற்குள் உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடர்வதற்கான வளங்கள் ரஷ்யத் தலைவரிடம் இல்லாமல் போய்விடும் என்று உக்ரைனின் உளவுத்துறைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஓலெக் இவாஷ்செங்கோ தெரிவித்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை வந்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அந்த அதிகாரி, ரஷ்யா தற்போது நாளொன்றுக்கு […]

தமது பூர்வீக நிலங்களை உடனடியாக விடுவிக்குமாறு கோரி யாழ். மயிலிட்டி மக்கள் இன்று வெள்ளிக்கிழமை 21 ஆவது வாரமாகவும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர். செய்தி

21 ஆவது வாரமாகத் தொடரும் மயிலிட்டி மக்களின் போராட்டம்

  • September 11, 2026
  • 0 Comments

தமது பூர்வீக நிலங்களை உடனடியாக விடுவிக்குமாறு கோரி யாழ். மயிலிட்டி மக்கள் இன்று வெள்ளிக்கிழமை 21 ஆவது வாரமாகவும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர். மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில் இந்தத் தொடர் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வரும் தமது பூர்வீக நிலங்களை இந்த மாதமாவது விடுவித்து, தங்களை மீள்குடியேற்ற அரசும் அரச அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் தீவிரமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர். பல வாரங்களாகத் தொடர் கோரிக்கைகளையும் போராட்டங்களையும் […]

ஐரோப்பா

பெர்லினில் ஹமாஸ் அமைப்பின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் 07 பேர் மீது குற்றச்சாட்டு

  • September 11, 2026
  • 0 Comments

பெர்லினில் ஹமாஸ் அமைப்பின் உறுப்பினர்களாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படும் ஏழுபேர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. வழக்குறைஞர்கள் இன்று முன்வைத்த குற்றச்சாட்டில்  07 பேரும் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக இருந்ததாகவும், ஆயுதங்களைக் கொள்முதல் செய்வது உட்பட தாக்குதலுக்குத் தயாரானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர்களின் உத்தரவின் பேரில் அந்த நபர்கள் செயல்பட்டதாகவும், இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதல்களின் இரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, 2025 அக்டோபர் தொடக்கத்தில் ஜெர்மனி அல்லது ஆஸ்திரியாவில் திட்டமிடப்பட்ட தாக்குதலுக்காக தானியங்கி […]

ஐரோப்பா

போர் களத்தில் ரஷ்யா பின்வாங்குகிறதா? திரிபுபடுத்தப்படும் தகவல்கள்

  • September 11, 2026
  • 0 Comments

போர்க்கள வெற்றிகள் குறித்துப் பொய் சொல்லும் ஒரு பரவலான கலாச்சாரம் நிலவுவதாக ரஷ்ய இராணுவ ஆய்வாளர்களும் இராணுவ வலைப்பதிவர்களும் தெரிவிக்கின்றனர். இந்த நிலை  உக்ரைனில் உள்ள முன்னணிப் பகுதி குறித்த மிகவும் திரிபுபடுத்தப்பட்ட பார்வையை ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு வழங்குவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள லைமன் அருகே ரஷ்யத் தளபதிகளிடமிருந்து வரும் தவறான அறிக்கைகள், உக்ரேனிய எதிர்த்தாக்குதல்களுக்குப் படைகளை இலக்காக்குவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஸ்வயாடோஹிர்ஸ்க் Svyatohirsk மீது முழுமையான கட்டுப்பாட்டை உக்ரேனியப் படைகள் உறுதிப்படுத்தியுள்ளன.  […]