உலகம்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

  • June 16, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவின் சுலாவேசி தீவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக இந்தோனேசியாவின் புவி இயற்பியல் நிறுவனமான BMKG தெரிவித்துள்ளது. மேற்படி நிலநடுக்கமானது பாலு நகருக்குத் தென்கிழக்கே சுமார் 42 கிலோமீட்டர் (26.1 மைல்கள்) தொலைவில், 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் வெளியாகாத நிலையில் மதிப்பீடு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம்

எத்தியோப்பியாவில் கோர விபத்து – 31 பேர் பலி!

  • June 16, 2026
  • 0 Comments

எத்தியோப்பியாவின் வடக்கு அம்ஹாரா பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று டெஸ்ஸி பகுதியிலிருந்து தலைநகர் அடிஸ் அபாபாவிற்குச் சென்று கொண்டிருந்த பேருந்து பள்ளத்தாக்கொன்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. அப்பகுதியில் அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகள் இல்லாததால், அவசரகால உதவிகள் தாமதமானதாகவும், இதனால் பயணிகள் பொது வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. விபத்து நடந்தபோது பேருந்தில் ஏராளமான பயணிகள் இருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். […]

உலகம் செய்தி

இஸ்ரேலின் தற்காப்பு உரிமைக்கு ஆபத்தா?

  • June 16, 2026
  • 0 Comments

ஈரான் உடனான அமெரிக்காவின் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து அமெரிக்க இஸ்ரேல் பொது விவகாரக் குழு (AIPAC) தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளது. இந்த ஒப்பந்தம் இஸ்ரேலின் தற்காப்பு உரிமையையும் அதன் பாதுகாப்புத் திறனையும் எந்த வகையிலும் பாதிக்கக்கூடாது என்று அந்த அமைப்பு வலியுறுத்துகிறது. ஈரானின் ஏவுகணைத் திட்டங்கள் மற்றும் பிராந்திய ஆயுதக் குழுக்களுக்கான ஆதரவு போன்ற முக்கியப் பிரச்சினைகளுக்கு இந்த இறுதி ஒப்பந்தம் தீர்வுகாண வேண்டும் என்று AIPAC எதிர்பார்க்கின்றது. இந்த பேச்சுவார்த்தை செயல்முறைகளில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் […]

ஐரோப்பா

ஜப்பானில் வட்டி விகிதம் உயர்வு : 31 ஆண்டுகளில் முதல்முறை!

  • June 16, 2026
  • 0 Comments

ஜப்பானில் கடந்த 31 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. ஈரான் போரினால் தூண்டப்பட்ட எரிசக்தி விலை உயர்வின் காரணமாக நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கையை முன்னெடுது்துள்ளது. இதற்கமைய ப்பான் வங்கி தனது குறுகிய கால கொள்கை வட்டி விகிதத்தை 0.75%-லிருந்து 1%-ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது. இது தொடர்பில் ஜப்பான் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலைகளால் ஏற்படும் விலை மாற்றங்கள், வணிகங்களுக்கு இடையேயான பரிவர்த்தனைகளில் ஒப்பீட்டளவில் வேகமாக […]

செய்தி விளையாட்டு

பரபரப்பானது ஆடுகளம்: ஈரான் தேசிய கீதத்துக்கு எதிர்ப்பு!

  • June 16, 2026
  • 0 Comments

லாஸ் ஏஞ்சல்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஈரான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்குரிய அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது என அறிவிப்புகள் வெளியான சூழலிலேயே இப்போட்டியும் நடைபெற்றது. திங்கட்கிழமை நடைபெற்ற இப்போட்டியின் போது, மைதானத்திற்கு வெளியே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததோடு, போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே நியூசிலாந்து அணியின் கேப்டன் கிறிஸ் வுட் கொடுத்த […]

செய்தி விளையாட்டு

இறுதிகட்டம்வரை பரபரப்பு: சமநிலையில் முடிந்த ஆட்டம்!

  • June 16, 2026
  • 0 Comments

உலகக் கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற கால்பந்து போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. ஆட்டத்தின் முதல் பாதியில் அப் துலேலா அலம்ரி கோல் அடித்து சவுதி அரேபியாவிற்கு முன்னிலை தேடித்தந்த நிலையில், இறுதி நேரத்தில் மேக்ஸி அராவ்ஜோ உருகுவே அணிக்காக ஒரு கோல் அடித்து தோல்வியைத் தவிர்த்தார். உருகுவே அணியின் பயிற்சியாளர் மார்செலோ பீல்சா இந்த முடிவை ஒரு தவறவிட்ட வாய்ப்பாகக் கருதினாலும், […]

இந்தியா செய்தி

33 ஆவது சர்வதேச விருதை வென்றார் மோடி!

  • June 16, 2026
  • 0 Comments

ஸ்லோவாக்கியா நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி , அந்நாட்டின் மிக உயரிய சிவிலியன் விருதான ‘தி ஆர்டர் ஆப் தி ஒயிட் டபுள் கிராஸ்’ வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். ஸ்லோவாக்கியா ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில், அந்நாட்டு ஜனாதிபதி பீட்டர் பெல்லெக்ரினி இந்த விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி சிறப்பித்தார். வெளிநாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளால் பிரதமர் மோடிக்கு வழங்கப்படும் 33-வது சர்வதேச விருது இது என்பது குறிப்பிடத்தக்கது. 1993-ம் ஆண்டு ஸ்லோவாக்கியா […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

பசுபிக் தீவு பாதுகாப்புக்காக புதிய திட்டம் முன்வைப்பு!

  • June 16, 2026
  • 0 Comments

சாலமன் தீவுகளின் புதிய பிரதமர் மேத்யூ வேல், பசிபிக் பிராந்தியத்திற்கான ஒரு புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை முன்மொழிந்துள்ளார். இந்த நடவடிக்கை இப்பிராந்தியத்தில் குறிப்பிடத்தக்க மூலோபாய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பசிபிக் தீவுகளின் கூட்டமைப்பிற்கு (PIF) தலைவராகவும் இருக்கும் மேத்யூ வேல் , ஜூன் மாத தொடக்கத்தில் ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸை சந்தித்தபோது இந்த யோசனையை முன்மொழிந்துள்ளார் என தெரியவருகின்றது. பிரதமராகப் பதவியேற்றது முதலே மேத்யூ வேல் , ஆஸ்திரேலியாவை நோக்கி ஒரு கூர்மையான மாற்றத்தை […]

உலகம் முக்கிய செய்திகள்

அமெரிக்காவின் குண்டுவீச்சு விமானம் விபத்து – 08 பேர் உயரிழப்பு!

  • June 16, 2026
  • 0 Comments

அமெரிக்க விமானப்படையின் பி-52 ஸ்ட்ராடோஃபோர்ட்ரஸ் குண்டுவீச்சு விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். தெற்கு கலிபோர்னியாவில் உள்ள எட்வர்ட்ஸ் விமானப்படைத் தளத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் இந்த விபத்து இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குண்டுவீச்சு விமானம் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்ததாக அமெரிக்க விமானப் படையினர் தெரிவித்துள்ளனர். விபத்து தொடர்பில் கருத்து வெளியளிட்டுள்ள கர்னல் ஜேம்ஸ் ஹேய்ஸ்(James Hayes ), “இன்று, எட்வர்ட்ஸ் விமானப்படைத் தளம் ஒரு பயங்கரமான துயரத்தைச் சந்தித்துள்ளது, மேலும் […]

இந்தியா செய்தி

அமைதி முயற்சி: இறுதி முடிவுக்காக இந்தியா காத்திருப்பு!

  • June 16, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான அமைதி ஒப்பந்தத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட எக்ஸ் பதிவில், “அமைதி ஒப்பந்தமானது பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் மீட்டெடுக்கவும், கப்பல் போக்குவரத்து, வர்த்தகச் சுதந்திரம் ஆகியவற்றை உறுதி செய்யவும் உதவும் என்று இந்தியா நம்புகின்றது. எஞ்சிய பிரச்சினைகள் குறித்த பேச்சுவார்த்தையில் ஒரு நிலையான இறுதி உடன்பாட்டை எட்டுவதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார். ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா […]