போர் களத்தில் ரஷ்யா பின்வாங்குகிறதா? திரிபுபடுத்தப்படும் தகவல்கள்
போர்க்கள வெற்றிகள் குறித்துப் பொய் சொல்லும் ஒரு பரவலான கலாச்சாரம் நிலவுவதாக ரஷ்ய இராணுவ ஆய்வாளர்களும் இராணுவ வலைப்பதிவர்களும் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலை உக்ரைனில் உள்ள முன்னணிப் பகுதி குறித்த மிகவும் திரிபுபடுத்தப்பட்ட பார்வையை ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு வழங்குவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள லைமன் அருகே ரஷ்யத் தளபதிகளிடமிருந்து வரும் தவறான அறிக்கைகள், உக்ரேனிய எதிர்த்தாக்குதல்களுக்குப் படைகளை இலக்காக்குவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஸ்வயாடோஹிர்ஸ்க் Svyatohirsk மீது முழுமையான கட்டுப்பாட்டை உக்ரேனியப் படைகள் உறுதிப்படுத்தியுள்ளன. இதன் மூலம், ரஷ்யப் படைகள் அந்நகரைக் கைப்பற்றிவிட்டதாக விளாடிமிர் புடின் சமீபத்தில் பகிரங்கமாகக் கூறிய கூற்றுகள் பொய்யாகியுள்ளன.
இவ்வாறான தவறான தகவல்கள் உக்ரைன் சரணடைய வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதை ஊக்குவிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என போர் ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.




