கிரிஸ் கெயிலின் 13 ஆண்டுகால சாதனை முறியடிப்பு
தென்னாப்பிரிக்காவின் CSA T20 Challenge தொடரில், ‘டைட்டன்ஸ்’ அணிக்காக விளையாடிய லுவான்-டிரே பிரிடோரியஸ் (Lhuan-dre Pretorius), ‘நைட்ஸ்’ அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 79 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 188 ரன்கள் குவித்து, T20 கிரிக்கெட் வரலாற்றில் கிறிஸ் கெய்லின் பல வருட சாதனையை முறியடித்துள்ளார். புளோம்போன்டீனில் (Bloemfontein) நடைபெற்ற இப்போட்டியில் 20 வயதான பிரிடோரியஸ், T20 போட்டிகளில் இரட்டைச் சதம் விளாசிய முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை படைக்க வெறும் 12 ரன்களே குறைவாக இருந்தார். […]













