காங்கோவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் எபோலா தொற்று
காங்கோவில் புதிதாக 06 பேர் எபோலா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு காங்கோவின் AFC/M23 கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் புதிய தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நான்கு பாதிப்புகள் மட்டுமே பதிவாகியிருந்த நிலையில், ஜூன் மாத இறுதியில் தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகள் எபோலா பாதிப்பற்றவை என்று கிளர்ச்சியாளர்கள் அறிவித்திருந்தனர்;
இருப்பினும், செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் வடக்கு கிவுவின் கைனா (Kayna) சுகாதார மண்டலத்தில் ஒரு புதிய பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
அந்த நோயாளி அங்குள்ள எபோலா சிகிச்சை மையத்தில் 26 நாட்கள் தங்கியிருந்த பிறகு கடந்த செவ்வாய்க்கிழமை வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்தே புதிய தொற்றுக்கள் இனங்காணப்பட்டுள்ளன.




