ஃப்ளைதுபாய் சம்பவம் – கடுமையான விலையை கொடுக்க நேரிடும் என நெதன்யாகு எச்சரிக்கை
ஃப்ளைதுபாய் சம்பவத்திற்குப் பின்னால் உள்ள எந்தவொரு சக்திக்கும் இஸ்ரேல் “மிகக் கடுமையான விலையை” விதிக்கும் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் இன்று வெளியிட்ட அறிக்கையில், “காலம் செல்லச் செல்ல, நிலைமை தெளிவாகிறது: தாக்குதல் நடத்தியவர் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு ஆட்பட்டுள்ளார்.
விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளுடனும் விமானத்தை மோதச் செய்வதற்காகவே அவர் வந்துள்ளார்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் அனுப்பப்பட்டாரா என்பதை நாங்கள் விசாரித்து வருகிறோம், அவரை அனுப்பியவர் யாராக இருந்தாலும் மிகக் கடுமையான விலையைக் கொடுப்பார்,” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நெதன்யாகு எந்தவொரு நாட்டையும் சாத்தியமான குற்றவாளியாக அடையாளம் காட்டவில்லை. ஆனால் மறைமுகமாக அவர் ஈரானை குறிப்பிடுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Prime Minister Benjamin Netanyahu:
“As time passes, the picture is becoming clearer. Yaniv and his heroic companions prevented a disaster on the scale of 9/11.The attacker underwent Islamist radicalization. He intended to crash the plane with all its passengers on board.
We… pic.twitter.com/GeWLLU2e6L
— Prime Minister of Israel (@IsraeliPM) October 2, 2026




