இலங்கை முக்கிய செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி – பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் கனேடிய எம்.பி

  • October 21, 2026
  • 0 Comments

செம்மணி மனிதப் புதைகுழியானது இலங்கையில் இன அழிப்புக்கு மத்தியில் வாழ்ந்த மக்கள் முகங்கொடுத்த அளவிலா துன்பங்களையும் மீறல்களையும் மீள நினைவுறுத்தியிருப்பதுடன்,  பொறுப்புக்கூறலை நோக்கிய பாதையில் பயணிக்கவேண்டியதன் தேவைப்பாட்டையும் உணர்த்தியிருப்பதாக கனேடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கனேடிய பாராளுமன்ற வளாகத்தில் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர்,  செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் பதில்களையும் நீதியையும் கோரிக் […]

கருத்து & பகுப்பாய்வு

இஸ்ரேல் தேர்தல் : தலைவர்கள் மாறலாம், ஆனால் இலக்குகள் மாறாது

  • October 21, 2026
  • 0 Comments

அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் இஸ்ரேலியத் தேர்தல் அதன் தலைவரை மாற்றக்கூடும், ஆனால் அதன் வியூகத்தை மாற்றாது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஈரான் அதன் பிரதான எதிரியாகவே தொடரும் என்றும் இராணுவ பலமே அதன் விருப்பமான கருவியாகத் தொடரும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன் பாலஸ்தீன அரசு உருவாவது ஒரு தொலைதூரக் கனவாகவே இருக்கும் என்றும் அரசியல் அவதானிகள் உறுதிப்பட தெரிவித்துள்ளனர். அக்டோபர் 7, 2023 அன்று பாலஸ்தீனப் போராளிக் குழுவான ஹமாஸ் தெற்கு இஸ்ரேலிய சமூகங்கள் மீது […]

ஐரோப்பா

ரஷ்யாவிற்கு ஆதரவாக செயற்படும் சமூக ஊடக தளங்கள் – போலந்து எச்சரிக்கை

  • October 21, 2026
  • 0 Comments

சமூக ஊடகத் தளங்கள் “டிஜிட்டல் போரில்” ரஷ்யாவின் “அமைதியான கூட்டாளியாக” செயல்படுகின்றன என்று போலந்து குற்றம் சாட்டியுள்ளது. தவறான தகவல்களைக் கட்டுப்படுத்த அவை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. போலந்தின் டிஜிட்டல் விவகார அமைச்சர் க்ஷிஷ்டோஃப் காவ்கோவ்ஸ்கி Krzysztof Gawkowski இன்று இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அரசின் கோரிக்கைகளைப் புறக்கணிக்கும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து வெவளியிட்டுள்ள அவர், “ரஷ்யாவுடன் ஒரு டிஜிட்டல் போர் நடைபெற்று வருகிறது.  […]

ஐரோப்பா

ஏதென்ஸில் உள்ள கட்டிடம் ஒன்றில் வெடிவிபத்து – நால்வர் படுகாயம்

  • October 21, 2026
  • 0 Comments

ஏதென்ஸ் நகரின்  கொலோனோஸ் (Kolonos) பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் இன்று  வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இரு காவலர்கள், கட்டிட மேலாளர் மற்றும் பொதுமக்களில் ஒருவர் என மொத்தம் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த நால்வரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக கிரேக்கக் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த கட்டிடத்தில் இனங்காணப்பட்ட மர்மமான பொதியை சோதனையிட்டபோது இந்த வெடிவிபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்விக்கான அரச நிதியை அதிகரித்தல், பாடசாலை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் வகுப்பறை நெரிசலைக் குறைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, கிரீஸில் சுமார் 10,000 மாணவர்களும் ஆசிரியர்களும் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

கிரீஸில் கல்வி நிதியை அதிகரிக்கக் கோரி 10,000 பேர் போராட்டம்

  • October 21, 2026
  • 0 Comments

கல்விக்கான அரச நிதியை அதிகரித்தல், பாடசாலை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் வகுப்பறை நெரிசலைக் குறைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, கிரீஸில் சுமார் 10,000 மாணவர்களும் ஆசிரியர்களும் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் ஏதென்ஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்ற இந்தப் போராட்டங்களில், இலவசப் பொதுக் கல்வியை உறுதிப்படுத்துமாறும் வலியுறுத்தப்பட்டது. அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவுகள், வீட்டு வாடகை மற்றும் எரிசக்திக் கட்டணங்கள் காரணமாக மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளும் போராட்டத்துக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன. ஊதிய உயர்வு மற்றும் பணியாளர் […]

ஐரோப்பா

எல்நினோ தாக்கம் – இங்கிலாந்தில் கடும் குளிரான வானிலைக்கு வாய்ப்பு

  • October 21, 2026
  • 0 Comments

எல்நினோ தாக்கத்தின் காரணமாக இங்கிலாந்து உட்பட வடமேற்கு ஐரோப்பா முழுவதும் அதிக ஈரப்பதம் மற்றும் புயல் போன்ற வானிலை நிலவுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு தசாப்தங்களில் இந்த ஆண்டில் நிலவிய எல்நினோ மிகவும் வலிமையானதாகப் பதிவாகியிருக்கலாம் என்று ஐ.நா. வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் வெப்பமண்டல பசிபிக் கடல் மேற்பரப்பு வெப்பநிலை சாதனை அளவை எட்டும் என்று உலக வானிலை ஆய்வு மையம் […]

இலங்கை

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் வழமைக்கு திரும்பியது

  • October 21, 2026
  • 0 Comments

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் நாளை (22) மீண்டும் மின் உற்பத்தியைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள திட்டமிடப்பட்ட மின்வெட்டுகளின் தேவை நீங்கக்கூடும் என தேசிய மின் கட்டமைப்புச் செயல்பாட்டு மையம் (NSO) தெரிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமையன்று தேசிய மின் கட்டமைப்பில் ஏற்பட்ட சமநிலையின்மை காரணமாக, நாடு தழுவிய அளவில் மின் தடை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து,  நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டதால், கடந்த இரண்டு நாட்களாக […]

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்கொப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினைச் சந்தித்து புதிய சமாதானப் பேச்சுவார்த்தைகள் குறித்து ஆலோசித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

புடினை சந்தித்தார் ட்ரம்பின் சிறப்பு தூதுவர்: போர் நிறுத்தம் குறித்து ஆராய்வு

  • October 21, 2026
  • 0 Comments

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சிறப்புத் தூதுவர் ஸ்டீவ் விட்கொப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினைச் சந்தித்து புதிய சமாதானப் பேச்சுவார்த்தைகள் குறித்து ஆலோசித்துள்ளார். ரஷ்யாவில் புதன்கிழமை (21) நடைபெற்ற இந்தச் சந்திப்பில், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய யோசனைகள் ஆராயப்பட்டதுடன், அமெரிக்கா, ரஷ்யா, உக்ரைன் பங்கேற்கும் முத்தரப்புப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதற்கிடையில், ரஷ்யாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 74 வயதான அமெரிக்க முன்னாள் ஆசிரியர் ஸ்டீபன் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் பணவீக்கத்தின் அளவு உச்சத்தை எட்டியது

  • October 21, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் வாழ்க்கை செலவு நெருக்கடிக்கு மத்தியில் பணவீக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. தேசிய புள்ளிவிவர அலுவலகம் (ONS) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, செப்டம்பர் மாதத்தில் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) 3.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.  இது கடந்த  ஆகஸ்ட் மாதத்தில் 3.1 சதவீதமாக இருந்தது. பெட்ரோல் மற்றும் டீசலின் சராசரி விலை கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ள நிலையில் போக்குவரத்து செலவு உயர்ந்ததே இதற்கு பிரதான காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த புதிய புள்ளிவிவரங்கள் குறித்து […]

டெஸ்ட் கிரிக்கெட்டில் 11,000 ஓட்டங்கள்: சாதனைப் பட்டியலில் இணைந்தார் ஸ்மித் செய்தி விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டில் 11,000 ஓட்டங்கள்: சாதனைப் பட்டியலில் இணைந்தார் ஸ்மித்

  • October 21, 2026
  • 0 Comments

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ஸ்டீவ் ஸ்மித், டெஸ்ட் கிரிக்கெட்டில் 11,000 ஓட்டங்களைக் கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். தென்னாபிரிக்காவுக்கு எதிராக கெபர்ஹாவில் உள்ள செயின்ட் ஜோர்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளான இன்று (21) இந்தச் சாதனையை அவர் பதிவு செய்தார். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 11,000 ஓட்டங்களைக் கடந்த மூன்றாவது அவுஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை ஸ்மித் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் ரிக்கி பொண்டிங் மற்றும் […]