செய்தி விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டில் 11,000 ஓட்டங்கள்: சாதனைப் பட்டியலில் இணைந்தார் ஸ்மித்

டெஸ்ட் கிரிக்கெட்டில் 11,000 ஓட்டங்கள்: சாதனைப் பட்டியலில் இணைந்தார் ஸ்மித்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ஸ்டீவ் ஸ்மித், டெஸ்ட் கிரிக்கெட்டில் 11,000 ஓட்டங்களைக் கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

தென்னாபிரிக்காவுக்கு எதிராக கெபர்ஹாவில் உள்ள செயின்ட் ஜோர்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளான இன்று (21) இந்தச் சாதனையை அவர் பதிவு செய்தார்.

இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 11,000 ஓட்டங்களைக் கடந்த மூன்றாவது அவுஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை ஸ்மித் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் ரிக்கி பொண்டிங் மற்றும் அலன் போர்டர் ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர். உலகளவில் இச்சாதனையைப் படைத்த 12ஆவது வீரர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்துள்ளது.

இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஸ்மித் 88 பந்துகளை எதிர்கொண்டு 28 ஓட்டங்களைப் பெற்றார். இதில் இரண்டு பவுண்டரிகளும் அடங்குகின்றன.

டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸ்களில் 11,000 ஓட்டங்களை எட்டிய வீரர்களின் பட்டியலிலும் ஸ்மித் இடம்பிடித்துள்ளார்.

இலங்கையின் குமார் சங்கக்கார 208 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டி முதலிடத்தில் உள்ளார்.

ரிக்கி பொண்டிங் 222 இன்னிங்ஸ்களிலும், இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 223 இன்னிங்ஸ்களிலும் 11,000 ஓட்டங்களை எட்டினர். ஸ்மித் தனது 226ஆவது இன்னிங்ஸில் இந்த இலக்கை அடைந்துள்ளார்.

மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் 1–1 என்ற கணக்கில் சமநிலையை ஏற்படுத்தும் நோக்கில் தென்னாபிரிக்க அணி இந்தப் போட்டியில் வெற்றியை இலக்காகக் கொண்டு விளையாடி வருகிறது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி