உலகம்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வு

  • September 28, 2026
  • 0 Comments

ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான ஈரானின் சமாதானத் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிராகரித்ததை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்ந்துள்ளன. இதன்படி சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை சுமார் 4 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. . அதன்படி, ஒரு பேரல் எண்ணெயின் விலை 108.50 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.    

ஐரோப்பா

ஐரோப்பாவில் அமைதியை நிலைநாட்ட சில நிலைப்பாடுகளை விட்டுக்கொடுக்க வேண்டும் – போப் லியோ

  • September 28, 2026
  • 0 Comments

உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும்  போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் தொடர்ந்து தோல்வியடைந்து வரும் நிலையில், ஐரோப்பாவில் போரை நிறுத்த முயலும் பேச்சுவார்த்தையாளர்கள் அமைதியை நிலைநாட்டத் தங்கள் சில நிலைப்பாடுகளை விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று போப் லியோ வலியுறுத்தியுள்ளார். பிரான்சின் வடகிழக்கு நகரமான மெட்ஸில் (Metz) பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், இது ஒரு புதிய அர்த்தமற்ற படுகொலை. இது ஒவ்வொரு நாளும் எண்ணற்ற பொதுமக்களின் உயிரைப் பறிக்கிறது” […]

ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் (Aichi-Nagoya) நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கையின் ருமேஷ் தரங்க பத்திரகே தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். செய்தி விளையாட்டு

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு முதலாவது தங்கப் பதக்கம்

  • September 28, 2026
  • 0 Comments

ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் (Aichi-Nagoya) நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கையின் ருமேஷ் தரங்க பத்திரகே தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் (Glasgow Commonwealth Games) அவர் வென்ற தங்கப் பதக்கத்தைத் தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டில் அவர் வசப்படுத்தும் மற்றுமொரு முக்கிய சர்வதேசப் பதக்கமாக இந்த வெற்றி அமைந்துள்ளது. ஆடவர் ஈட்டி எறிதலில் தற்போது உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ருமேஷ் தரங்க, […]

யாழ்ப்பாணம், நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த அவரது சிலையை வலுக்கட்டாயமாக அகற்றிய பொலிஸாரின் அடாவடித்தனத்தைக் கண்டித்தும், தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் வடக்கு, கிழக்கில் இன்று திங்கட்கிழமை மாபெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இலங்கை செய்தி

அகற்றப்பட்ட திலீபனின் சிலையை மீள நிறுவுமாறு வலியுறுத்தி போராட்டம்

  • September 28, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த அவரது சிலையை வலுக்கட்டாயமாக அகற்றிய பொலிஸாரின் அடாவடித்தனத்தைக் கண்டித்தும், தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் வடக்கு, கிழக்கில் இன்று திங்கட்கிழமை மாபெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டின் இந்தப் போராட்டங்கள் இடம்பெற்றன. இதற்கமைய, யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள தியாகி திலீபன் நினைவாலயம் முன்பாக இன்று பிற்பகல் மாபெரும் கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் காணாமல் […]

உலகம்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை – ஈரான் திட்டவட்டம்

  • September 28, 2026
  • 0 Comments

ஐ.நா பொதுச் சபையில் கலந்துகொள்ளும் ஈரானிய தூதுக்குழு, அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தத் திட்டமிடவில்லை என்று ஈரானின் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான ஈரானிய அரசாங்கத்தின் முன்மொழிவை நிராகரித்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்ப்பதாக கூறினார். இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள ஈரான், அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தத் திட்டமிடவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. கத்தார் மத்தியஸ்தர் மூலம் ஈரானின் நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட்டதாகவும் IRNA […]

இலங்கைக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான கடற்றொழில், கடல்சார் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல், இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவான் எஸ். டிகேரியன் மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோருக்கிடையில் இன்று (28.09.2026) கடற்றொழில் அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கை செய்தி

ஆழ்கடல் மீன்பிடி: ரஷ்ய தொழில்நுட்பட உதவியை நாடும் இலங்கை

  • September 28, 2026
  • 0 Comments

இலங்கைக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான கடற்றொழில், கடல்சார் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல், இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவான் எஸ். டிகேரியன் மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோருக்கிடையில் இன்று (28.09.2026) கடற்றொழில் அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சிநேகபூர்வமான சந்திப்பின்போது, இலங்கையின் கடல்சார் உற்பத்திகளுக்கான ரஷ்ய சந்தை வாய்ப்புகளை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன. இலங்கையின் கடல்சார் உற்பத்திகளான டுனா, இறால் […]

இலங்கை

கிருஷ்’ ஒப்பந்தம் – 04ஆவது குற்றவாளியாக பெயரிடப்பட்டார் நாமல்

  • September 28, 2026
  • 0 Comments

சர்ச்சைக்குரிய ‘கிருஷ்’ ஒப்பந்தம் தொடர்பாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இலஞ்ச ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நான்காவது குற்றவாளியாகப் பெயரிடப்பட்டுள்ளார். பிரபல இந்திய சொத்து அபிவிருத்தி நிறுவனமான ‘கிருஷ்’ சம்பந்தப்பட்ட நிதி முறைகேடுகள் மற்றும் இலஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில், இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையும் நீதிமன்ற நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், […]

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுக்கின்றோம் - என்று மகிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வலவாஹெங்குனவெவே தம்மரதன தேரர் தெரிவித்தார். இலங்கை செய்தி

ஞானசார தேரருக்கு மன்னிப்புகோரி பௌத்த பிக்குகள் களத்தில்

  • September 28, 2026
  • 0 Comments

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுக்கின்றோம் – என்று மகிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வலவாஹெங்குனவெவே தம்மரதன தேரர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக கலகொட அத்தே ஞானசார தேரருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிகாலத்தில் அவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் மன்னிப்பு வழங்கப்பட்ட விதம் […]

ஐரோப்பா

வட அயர்லாந்தில் பதற்றம் – புராட்டஸ்டன்ட் ஊர்வலம் தடுத்து நிறுத்தம்

  • September 28, 2026
  • 0 Comments

வட அயர்லாந்து நகரின் கத்தோலிக்கப் பகுதி வழியாகச் செல்லவிருந்த புரட்டஸ்தாந்து  Protestant  மதப்பிரிவினரின் ஊர்வலத்தைத் அப்பகுதியில் வசித்து வந்த சில குடியிருப்பாளர்கள் தடுத்ததை தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  அமைச்சர் ஒருவர், குடியிருப்பாளர்களை இன்று சந்தித்து இந்த பிரச்சினைக்கு சமரசம் காண முயற்சிப்பதாக கூறப்படுகிறது. அடுத்த இரண்டு நாட்களில் ஊர்வலம் நடைபெறாவிட்டால் “கடுமையான” விளைவுகள் ஏற்படும் என்று உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் எச்சரித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வட அயர்லாந்தின் முதல் அமைச்சர் மிஷேல் […]

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. செய்தி விளையாட்டு

15 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்து விராட் கோலி சாதனை

  • September 28, 2026
  • 0 Comments

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் ஆட்டமிழக்காமல் சதம் விளாசிய விராட் கோலி, சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் 15,000 ஓட்டங்களைக் கடந்த இரண்டாவது சர்வதேச வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் நிர்ணயித்த 296 ஓட்டங்கள் என்ற இலக்கை இந்தியா 50 பந்துகள் மீதமிருக்கையிலேயே எட்டியது. விராட் கோலி 88 பந்துகளில் 139 […]