2026-27 UEFA நெஷன்ஸ் லீக் (UEFA Nations League) தொடரில் பிரான்ஸ் அணிக்கு அதன் தலைவர் கிலியன் எம்பாப்பே (Kylian Mbappe) வெற்றிகரமான தொடக்கத்தைப் பெற்றுத்தந்த போதிலும், ஏற்பட்ட முழங்கால் காயம் காரணமாக திங்கள்கிழமை பெல்ஜியத்திற்கு எதிரான போட்டியில் அவர் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. செய்தி விளையாட்டு

காயத்தால் விலகிய எம்பாப்பே: பிரான்ஸுக்குக் காத்திருக்கும் கடும் சவால்

  • September 28, 2026
  • 0 Comments

2026-27 UEFA நெஷன்ஸ் லீக் (UEFA Nations League) தொடரில் பிரான்ஸ் அணிக்கு அதன் தலைவர் கிலியன் எம்பாப்பே (Kylian Mbappe) வெற்றிகரமான தொடக்கத்தைப் பெற்றுத்தந்த போதிலும், ஏற்பட்ட முழங்கால் காயம் காரணமாக திங்கள்கிழமை பெல்ஜியத்திற்கு எதிரான போட்டியில் அவர் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. துருக்கிக்கு எதிரான தொடக்க போட்டியில் எம்பாப்பே அடித்த கோலால் பிரான்ஸ் 1-0 என வெற்றி பெற்ற நிலையில், போட்டிக் காலத்தில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக பிரான்ஸ் அணியின் முன்னணி […]

சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் இறக்குமதி செய்யப்படும் 60 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களுக்கான வரியைக் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளன. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

வர்த்தகப் போரில் திடீர் திருப்பம்: வரி குறைப்புக்கு அமெரிக்கா, சீனா இணக்கம்

  • September 28, 2026
  • 0 Comments

சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் இறக்குமதி செய்யப்படும் 60 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களுக்கான வரியைக் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளன. அமெரிக்கச் சோளம் முதல் அழகுசாதனப் பொருட்கள் வரையிலும், சீனாவின் வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் பொம்மைகள் வரையிலும் பரந்தளவிலான பொருட்களுக்கு இவ்வரிவிலக்கு அளிக்கப்படவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே தூதரக அளவில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், உணர்திறன் அற்ற (Non-sensitive) 30 பில்லியன் டொலர் மதிப்பிலான வர்த்தகப் பொருட்களுக்குச் சாதகமான வரிச் சலுகைகளை வழங்க […]

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியின் வல்லை வெளிப் பகுதியில் இன்று இடம்பெற்ற கோர வீதி விபத்தில் பூசாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: பூசகர் பலி

  • September 28, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியின் வல்லை வெளிப் பகுதியில் இன்று இடம்பெற்ற கோர வீதி விபத்தில் பூசாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இளைஞர் ஒருவரின் மோட்டார் சைக்கிள், அப்பகுதியூடாகப் பயணித்துக் கொண்டிருந்த பூசாரியின் மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளில் இருந்து பூசாரி வீதியில் தூக்கி வீசப்பட்ட நிலையில், அவருக்குப் பின்னால் வந்த பட்டா ரக வாகனம் அவர் மீது மோதியுள்ளது. இதனால் வாகனத்தின் சக்கரத்தில் சிக்கிப் படுகாயமடைந்த பூசாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். […]

ஐரோப்பா

கத்தோலிக்க மதகுருக்களால் இழைக்கப்படும் அநீதியை முடிவுக்கு கொண்டுவர போப் லியோ உறுதி

  • September 28, 2026
  • 0 Comments

கத்தோலிக்க மதகுருக்களால் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது உறுதிப்பாட்டை போப் லியோ மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் வத்திக்கான் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிரான்சில் மூன்று நகரங்களில் வார இறுதிப் பயணத்தை மேற்கொண்ட போப் லியோ பாதிக்கப்பட்ட ஏழு பேருடன் சுமார் இரண்டு மணிநேரம் சந்திப்பை நடத்தினார். ஒவ்வொரு பாதிக்கப்பட்டவரையும் தனித்தனியாகச் சந்தித்த அவர், திருச்சபையின் பாதுகாப்பு நடவடிக்கைகளை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்த ஆலோசனைகளைக் கேட்டறிந்துள்ளார். சாட்சியங்களுக்கு  நன்றி கூறிய அவர்,  அவர்கள் அனுபவித்த […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் ஆரம்பம்

  • September 28, 2026
  • 0 Comments

மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை தமிழக முதலமைச்சர் விஜய் இன்று (செப். 28) முறைப்படி தொடங்கி வைத்தார். மதுரைக்கு வருகை தந்த முதலமைச்சருக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனை வளாகமும் விழாக்க கோலம் பூண்டிருந்தது. முதல்கட்டமாக மும்மதங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்களை அணிவித்து இத்திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். விழாவில் பயனடைந்த தாய்மார்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் விஜய், பெற்றோரின் வேண்டுகோளுக்கிணங்க பல குழந்தைகளுக்குப் பெயர் சூட்டி மகிழ்ந்தார். […]

ஜெர்மனியில் அண்மையில் நடைபெற்ற மாநிலத் தேர்தல்களில் தீவிர வலதுசாரி மற்றும் தீவிர இடதுசாரிக் கட்சிகள் ஈட்டிய வெற்றிகளைத் தொடர்ந்து, ரஷ்யா அல்லது குற்றக் கும்பல்களுக்கு ரகசியத் தகவல்கள் கசியக்கூடும் என்பதால் பாதுகாப்பு அமைப்புகளின் ரகசியத் தகவல்களைக் கட்டுப்படுத்துவது குறித்து அந்நாட்டு அதிகாரப்பூர்வ வட்டாரங்களில் காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன. ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

ஜெர்மனியின் உளவுத் தகவல்கள் ரஷ்யாவின் கைகளுக்குள் செல்லும் அபாயம்

  • September 28, 2026
  • 0 Comments

ஜெர்மனியில் அண்மையில் நடைபெற்ற மாநிலத் தேர்தல்களில் தீவிர வலதுசாரி மற்றும் தீவிர இடதுசாரிக் கட்சிகள் ஈட்டிய வெற்றிகளைத் தொடர்ந்து, ரஷ்யா அல்லது குற்றக் கும்பல்களுக்கு ரகசியத் தகவல்கள் கசியக்கூடும் என்பதால் பாதுகாப்பு அமைப்புகளின் ரகசியத் தகவல்களைக் கட்டுப்படுத்துவது குறித்து அந்நாட்டு அதிகாரப்பூர்வ வட்டாரங்களில் காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன. கடந்த செப்டம்பர் 6 ஆம் திகதி கிழக்கு மாநிலமான சாக்சனி-அன்ஹால்டில் (Saxony-Anhalt) கிட்டத்தட்ட முழுப் பெரும்பான்மையைப் பெறவிருந்த தீவிர வலதுசாரி ‘அல்டர்னேட்டிவ் பார் ஜெர்மனி’ (AfD) கட்சியினாலும், செப்டம்பர் […]

சவூதி அரேபியா மற்றும் யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு இடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சவூதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் Faisal bin Farhan), அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் (Marco Rubio) பேச்சுவார்த்தை நடத்துவதற்காக திங்கள்கிழமை வாஷிங்டன் சென்றடைந்துள்ளதாக சவூதி அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஹூதி அமைப்பினரை ஒழிக்க சவூதிக்கு தோள் கொடுக்குமா அமெரிக்கா?

  • September 28, 2026
  • 0 Comments

சவூதி அரேபியா மற்றும் யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு இடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சவூதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் Faisal bin Farhan), அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் (Marco Rubio) பேச்சுவார்த்தை நடத்துவதற்காக திங்கள்கிழமை வாஷிங்டன் சென்றடைந்துள்ளதாக சவூதி அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இச்சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள் குறித்தும், முக்கிய பிராந்திய மற்றும் சர்வதேச முன்னேற்றங்கள் குறித்தும் இரு தலைவர்களும் கலந்துரையாடவுள்ளதாக அச்செய்தி நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது. ஈரானின் ஆதரவு பெற்ற […]

உலகம்

போர் கைதி பறிமாற்ற விவகாரம் – ஒப்பந்தத்தை மீறிய உக்ரைன்

  • September 28, 2026
  • 0 Comments

வட கொரியப் போர்க் கைதிகள் தென் கொரியாவிடம் ஒப்படைக்கப்பட்ட விவகாரத்தை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று உக்ரைன் மற்றும் சியோலுக்கு இடையே ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியிருந்தது. இருப்பினும் இந்த ஒப்பந்தத்தை உக்ரைன் தன்னிச்சையாக மீறியுள்ளதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது. இதற்காக உக்ரைன் அதிகாரப்பூர்வ விளக்கமும் மன்னிப்பும் கோர வேண்டும் என்று தென் கொரிய ஜனாதிபதி அலுவலகம் இன்று குறிப்பிட்டுள்ளது. ரகசியத்தன்மை ஒப்பந்தம் எதுவும் இல்லை என்று பின்னர் உக்ரைன் மறுத்தது பொய்யானது என்றும், அது இரு அரசாங்கங்களுக்கு […]

இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட விளக்கக் குறிப்பை அடுத்து, பாஜகவைச் சேர்ந்த 12 மாநில முதலமைச்சர்கள் தங்களது மாநிலங்களில் செய்தியாளர் சந்திப்புகளை நடத்தி தேர்தல் ஆணையத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தியா செய்தி

தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஆதரவாக பாஜக முதலமைச்சர்கள் களத்தில்

  • September 28, 2026
  • 0 Comments

இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட விளக்கக் குறிப்பை அடுத்து, பாஜகவைச் சேர்ந்த 12 மாநில முதலமைச்சர்கள் தங்களது மாநிலங்களில் செய்தியாளர் சந்திப்புகளை நடத்தி தேர்தல் ஆணையத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி மற்றும் ‘இந்தியா’ (INDIA) கூட்டணித் தலைவர்கள் அரசியல் சாசன நிறுவனங்களை அவமதிக்கும் சதியில் ஈடுபடுவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பில் மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கருத்து வெளியிடுகையில், வாக்குகள் எதுவும் திருடப்படவில்லை, ராகுல் காந்தியின் மனம்தான் திருடப்பட்டுள்ளது” […]

இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் சுமத்தி வரும் குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய அமைச்சரும் பா.ஜ.க தலைவருமான ஜே.பி. நட்டா கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியா செய்தி

எதிரணிகள்மீது பாஜக தலைவர் பாய்ச்சல்

  • September 28, 2026
  • 0 Comments

இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் சுமத்தி வரும் குற்றச்சாட்டுகள் குறித்து மத்திய அமைச்சரும் பா.ஜ.க தலைவருமான ஜே.பி. நட்டா கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் “அனைத்துப் பொய்களையும்” தேர்தல் ஆணையம் அம்பலப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், எதிர்க்கட்சித் தலைவர்கள் மக்களைத் தவறாக வழிநடத்தி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயல்வதாகவும் சாடியுள்ளார். புதுடெல்லியில் ஊடகவியலாளர்களிடம் பேசிய ஜே.பி.நட்டா, எதிர்க்கட்சிகள் சுமத்திய குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் பரிசீலிக்கப்பட்ட போது மீண்டும் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் ஆணையம் மற்றும் நாட்டின் உச்ச நீதிமன்றம் […]