உலகம்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை – ஈரான் திட்டவட்டம்

ஐ.நா பொதுச் சபையில் கலந்துகொள்ளும் ஈரானிய தூதுக்குழு, அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தத் திட்டமிடவில்லை என்று ஈரானின் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான ஈரானிய அரசாங்கத்தின் முன்மொழிவை நிராகரித்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்ப்பதாக கூறினார்.

இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள ஈரான், அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தத் திட்டமிடவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

கத்தார் மத்தியஸ்தர் மூலம் ஈரானின் நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட்டதாகவும் IRNA செய்தி நிறுவனம் தெரிவித்தள்ளது.

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், உலகின் சுமார் 20 சதவீத எண்ணெய் மற்றும் எரிவாயுப் போக்குவரத்து செல்லும் ஒரு மூலோபாய நீர்வழியான ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறப்பதற்கும் ஏழு நிபந்தனைகளை ஈரான் முன்மொழிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்