வட அயர்லாந்தில் பதற்றம் – புராட்டஸ்டன்ட் ஊர்வலம் தடுத்து நிறுத்தம்
வட அயர்லாந்து நகரின் கத்தோலிக்கப் பகுதி வழியாகச் செல்லவிருந்த புரட்டஸ்தாந்து Protestant மதப்பிரிவினரின் ஊர்வலத்தைத் அப்பகுதியில் வசித்து வந்த சில குடியிருப்பாளர்கள் தடுத்ததை தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அமைச்சர் ஒருவர், குடியிருப்பாளர்களை இன்று சந்தித்து இந்த பிரச்சினைக்கு சமரசம் காண முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
அடுத்த இரண்டு நாட்களில் ஊர்வலம் நடைபெறாவிட்டால் “கடுமையான” விளைவுகள் ஏற்படும் என்று உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் எச்சரித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வட அயர்லாந்தின் முதல் அமைச்சர் மிஷேல் ஓ’நீல் மற்றும் ஐரிஷ் தேசியவாதக் கட்சியான SDLP-யின் தலைவர் கிளேர் ஹன்னா உட்பட சுமார் 2,000 போராட்டக்காரர்கள் நேற்றைய தினம் ஊர்வலப் பாதையை மறித்தமை குறிப்பிடத்தக்கது.




