பெண்களுக்கு எதிராக அவதூறு பரப்பினால் கடும் சட்ட நடவடிக்கை: முதல்வர் எச்சரிக்கை
பெண்களுக்கு எதிராக அவதூறான மற்றும் ஆபாசமான கருத்துக்களைத் தெரிவிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடுமையாக எச்சரித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர், “அரசியல் காரணங்களுக்காகப் பெண்களையோ அல்லது பிறரையோ இழிவாகப் பேசக் கூடாது. கருத்துச் சுதந்திரம் என்பது அனைவருக்கும் உரிமையானது என்றாலும், அதனை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில் கவனம் தேவை. சமீபகாலமாகத் தமிழ்நாட்டில் அவதூறுகளும் அருவருப்பான பேச்சுக்களும் பெருக்கெடுத்து ஓடுகின்றன” எனக் குறிப்பிட்டார். திரைத்துறையிலும், தற்போதைய அரசியல் […]













