ரஷ்யாவுடனான போர் குளிர்காலம் வரை தொடரும் – ஜெலன்ஸ்கி சூளுரை
ரஷ்யாவுடனான போர் குளிர்காலம் வரை தொடரும் என எதிர்பார்ப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கீவ் நகரில் டொனால்ட் ட்ரம்பின் உயர்மட்ட தூதர்களை சந்தித்தப்பின் அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
மூடிய கதவுகளுக்கு பின்னால் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் என்னென்ன விடயங்கள் இடம்பெற்றது என்பது மர்மமாக உள்ளது.
அதேநேரம் ரஷ்யாவின் புதுப்பிக்கப்பட்ட ஆக்கிரமிப்புக்கு எந்த வாய்ப்பும் இல்லாத ஒரு நியாயமான அமைதியையே தாம் விரும்புவதாக ஜெலென்ஸ்கி வலியுறுத்தினார்.
அத்துடன் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் குளிர்காலம் வரை போர் தொடரும் என எதிர்பார்க்கப்படும் பட்சத்தில், வான்பாதுகாப்பு ஆயுதங்கள் தேவை எனவும் அவர் வலியுறுத்தினார்.
ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு முதன்முறையாக ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் உக்ரைன், மற்றும் ரஷ்யாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.
இருப்பினும் இந்த விஜயம் எதிர்பார்த்த அளவிற்கு பலனளிக்கவில்லை.




