இந்தியா செய்தி

டெல்லியில் விடுதி கட்டிடம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிப்பு

தென்​மேற்கு டெல்​லி​யின் சத்ய நிகேதன் பகு​தி​யில் 6 மாடி கட்​டிடம் ஒன்று நேற்று இடிந்து விழுந்​த​தில் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 06 ஆக அதிகரித்துள்ளது.

தென்​மேற்கு டெல்​லி​யின் சத்ய நிகேதன் பகு​தி​யில் 6 மாடி கட்​டிடம் ஒன்று நேற்று இடிந்து விழுந்​த​தில் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 06 ஆக அதிகரித்துள்ளது.

தென்​மேற்கு டெல்​லி​யின் சத்ய நிகேதன் பகு​தி​யில் 6 மாடி கட்​டிடம் மாணவர் விடு​தி​யாக செயல்​பட்டு வந்​தது.

டெல்லி பல்​கலைக்​கழகத்​தின் தெற்கு வளாகத்​துக்கு அரு​கில் இக்​கட்​டிடம் அமைந்​துள்​ள​தால் ஏராள​மான மாணவர்​கள் தங்​கிப் படித்து வந்​த​தாக கூறப்​படு​கிறது. இந்த கட்​டிடம் நேற்று பிற்​பகல் 1:30 மணி​யள​வில் திடீரென இடிந்து விழுந்​தது.

இதுகுறித்து தகவல் அறிந்​ததும் சம்பவ இடத்​துக்கு 12 தீயணைப்பு வாக​னங்​கள், பொக்​லைன் இயந்​திரங்​கள் மற்​றும் பேரிடர் மீட்​புப் படை​யினர் விரைந்​தனர்.

அதி​காரப்​பூர்வ மீட்​புக் குழு​வினர் வரு​வதற்கு முன்​பாகவே, உள்​ளூர் மக்​கள் கைகளாலேயே இடி​பாடு​களை அகற்றி இடி​பாடு​களுக்​குள் சிக்​கிய​வர்​களை மீட்​கும் பணி​யில் ஈடு​பட்​டனர். இந்த விபத்​தில் 6 மாணவர்கள் உயி​ரிழந்​தனர். மேலும் சிலர் மீட்​கப்​பட்டு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டனர். கட்டிடத்தின் உரிமையாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கட்​டிட இடி​பாடு​களுக்​குள் பலர் சிக்​கி​யிருக்​கலாம் என்​ப​தால் மீட்​புப் பணி தொடர்ந்து நடை​பெறுகிறது. இதனால் உயி​ரிழப்பு எண்​ணிக்கை மேலும் அதி​கரிக்​கும் என அஞ்​சப்​படு​கிறது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி