செய்தி

மியாமி விமான நிலையத்தில் Amazon விமானம் விபத்து: ஐந்து பேர் பலி

அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் (Miami International Airport) ஞாயிற்றுக்கிழமை தரையிறங்க முயன்ற அமேசான் பிரைம் எயர் (Amazon Prime Air) நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று ஓடுதளத்தைக் கடந்து சென்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் (Miami International Airport) ஞாயிற்றுக்கிழமை தரையிறங்க முயன்ற அமேசான் பிரைம் எயர் (Amazon Prime Air) நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று ஓடுதளத்தைக் கடந்து சென்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போர்ட்டோ ரிகோவின் சான் ஜுவான் நகரில் இருந்து புறப்பட்ட பிரைம் எயர் 7598 ரக விமானம், பிற்பகல் 2.00 மணியளவில் மியாமி விமான நிலையத்தின் குறுக்கு ஓடுதளத்தில் தரையிறங்கியபோது கட்டுப்பாட்டை இழந்து ஓடுதளத்தைத் தாண்டிச் சென்று தரையிலிருந்த பல வாகனங்கள் மீது மோதியது.

இவ்விபத்தில் மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மியாமி-டேட் தீயணைப்புப் படைத் தலைவர் ரே ஜடல்லா (Ray Jadallah) தெரிவித்துள்ளார்.

விமானம் மோதிய வாகனங்களுக்குள் இருவர் சிக்கிக்கொண்டதுடன், விமானத்தின் முன்னோடி (Pilot) மற்றும் உதவி முன்னோடி ஆகியோரும் விமானத்தின் உள்ளேயே சிக்கியிருந்ததாக அவர் குறிப்பிட்டார். உயிரிழந்தவர்களின் விவரங்களை வெளியிட அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

சம்பவ இடத்திற்கு 60-க்கும் மேற்பட்ட மீட்புக் குழுக்களும் சுமார் 200 மீட்புப் பணியாளர்களும் விரைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். விமானத்தில் இருந்து எரிபொருள் தொடர்ந்து கசிந்து கொண்டிருந்ததால் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

விபத்தைத் தொடர்ந்து விமான நிலையத்தின் அனைத்துச் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போதிலும், ஞாயிற்றுக்கிழமை மாலையளவில் இரண்டு ஓடுதளங்கள் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.

விபத்துக்குள்ளான 32 ஆண்டுகள் பழமையான போயிங் 767-300 (Boeing 767-300) ரக சரக்கு விமானம், 1994 முதல் 2015 வரை பயணிகள் விமானமாகச் செயல்பட்டுள்ளது. இவ்விமானத்தை ’21 எயர்’ (21 Air) எனும் சரக்கு விமான நிறுவனம் அமேசான் சார்பாக இயக்கி வந்ததாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள 21 எயர் மற்றும் அமேசான் நிறுவனங்கள், விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளன.

மேலும் அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் (NTSB) தலைவர் ஜெனிஃபர் ஹோமெண்டி தலைமையிலான விசாரணைக் குழுவினர் மியாமிக்கு நேரில் சென்று விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

முன்னதாக, கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமும் அமேசான் பிரைம் எயர் சார்பாக இயக்கப்பட்டு மியாமியில் இருந்து ஹூஸ்டன் சென்ற அட்லஸ் எயர் (Atlas Air) சரக்கு விமானம் டெக்சாஸில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மூவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி