காசாவிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் திட்டம் எதுவும் இஸ்ரேலிய அரசாங்கத்திடம் இல்லை என்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கிதியோன் சார் (Gideon Saar) புதன்கிழமை தெரிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

காசாவிலிருந்து பாலஸ்தீனர்களை வெளியேற்றமாட்டோம்: இஸ்ரேல் உறுதி

  • September 9, 2026
  • 0 Comments

காசாவிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் திட்டம் எதுவும் இஸ்ரேலிய அரசாங்கத்திடம் இல்லை என்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கிதியோன் சார் (Gideon Saar) புதன்கிழமை தெரிவித்துள்ளார். இம்மாதத் தொடக்கத்தில் இரு இஸ்ரேலிய அமைச்சர்கள் பாலஸ்தீனியர்களைக் கடற்கரை பிராந்தியமான காசாவிலிருந்து பெருமளவில் வெளியேற்றுவதற்கான முன்மொழிவுகளை முன்வைத்திருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஸ்லோவேனியாவின் லியுப்லியானா (Ljubljana) நகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கிதியோன் சார், “காசா பகுதியில் இருந்து யாரையும் வெளியேற்றவோ அல்லது நாடுகடத்தவோ நாங்கள் திட்டமிடவில்லை” என்று […]

உலகம்

AfD கட்சியின் வெற்றிக்கு குடியேற்ற விதிமுறைகளே காரணம் – ட்ரம்ப் கருத்து

  • September 9, 2026
  • 0 Comments

ஜெர்மனியின் தீவிர வலதுசாரி கட்சியான ‘ஆல்டர்நேட்டிவ் ஃபார் ஜெர்மனி’ (AfD), மாநிலத் தேர்தலில் வெற்றிப் பெற்றமைக்கு குடியேற்ற விதிமுறைகளே காரணம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பெருமளவிலான குடியேற்றம் குறித்த பொதுமக்களின் அதிருப்தியால் வலுப்பெற்ற AfD கட்சி, சாக்சனி-அன்ஹால்ட் (Saxony-Anhalt) மாநிலத் தேர்தலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தீவிர வலதுசாரி கட்சியொன்று அதிகாரத்தைக் கைப்பற்றும் நிலைக்கு நெருங்கி வருவது இதுவே முதல் முறையாகும். சாக்சனி-அன்ஹால்ட் (Saxony-Anhalt) மாநிலத்தின் முதல்வராக வரவிரும்பும் […]

கிளிநொச்சி - ஏ-9 வீதியின் விழாவோடைப் பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இலங்கை செய்தி

கிளிநொச்சியில் கோர விபத்து: மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி

  • September 9, 2026
  • 0 Comments

கிளிநொச்சி – ஏ-9 வீதியின் விழாவோடைப் பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று பிற்பகல் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவரே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். விபத்து இடம்பெற்றதையடுத்து காரின் சாரதி அங்கிருந்து தப்பியோடி, கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைக் கிளிநொச்சிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அறிவியல் & தொழில்நுட்பம்

AI ஆல் மனிதக் குலம் அழியவும் வாய்ப்பு – முன்னணி ஆய்வாளர் எச்சரிக்கை

  • September 9, 2026
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவு (AI) மிக வேகமாக வளர்ந்து வருவதாகவும், அடுத்த பத்தாண்டுகளுக்குள் அது “மனிதகுலம் முழுவதையும் அழித்துவிடும்” அபாயம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதாக Anthropic நிறுவனத்தின் முன்னணி பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஆய்வாளர் Evan Hubinger, தற்போதுள்ள AI மாதிரிகளால் ஏற்படும் ஆபத்து “குறைவு”தான் என்றாலும், இந்தத் தொழில்நுட்பம் விரைவில் தானாகவே வளர்ந்து மேம்பட்டு, மனிதகுலத்தின் இருத்தலுக்கே ஆபத்தை விளைவிக்கும் நிலையை அடையக்கூடும் என்று கவலை […]

உலகம்

ஈராக் கடல் எல்லைக்குள் எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல் மீது தாக்குதல்

  • September 9, 2026
  • 0 Comments

ஈராக் கடல் எல்லைக்குள், எரிபொருள் ஏற்றிச் சென்ற எண்ணெய் கப்பல் மீது இன்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது, சுமார்  2 மில்லியன் பீப்பாய் அளவுள்ள பனாமா கொடியுடன் பயணித்த எண்ணெய் டேங்கர் கப்பல் ஒன்று ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளானதாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கப்பலில் இருந்த 22 பணியாளர்களில் யாருக்கும் பாதிப்போ அல்லது உயிரிழப்போ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்றும் ஈராக் துறைமுக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அதேவேளையில், வளைகுடாப் பகுதியில் பல வணிகக் கப்பல்கள் இரவு நேரத்தில் தாக்குதலுக்கு […]

ஐரோப்பா

சுவிஸில் நீர் மின் நிலையத்தில் வெடி விபத்து

  • September 9, 2026
  • 0 Comments

சுவிட்ஸர்லாந்தில் உள்ள நீர்மின் நிலையம் ஒன்றில் இன்று காலை வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில்  இருவர் பலத்த காயமடைந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்து பியோட்டா (Piotta) கிராமத்தில் நிகழ்ந்ததாக டிசினோ (Ticino) மாகாணத்தைச் சேர்ந்த காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் அவசரக்கால மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தில் பணியாற்றி வருவதாகவும், வெடி விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஐரோப்பா

நிர்வாணப் படங்களை எடுப்பதையோ, பகிர்வதையோ தடுக்குமாறு தொழில்நுட்ப நிறுவனங்களிடம் கோரிக்கை

  • September 9, 2026
  • 0 Comments

குழந்தைகள் தங்கள் அலைபேசிகள் மற்றும் டேப்லெட்களில் நிர்வாணப் படங்களை எடுப்பதையோ, பகிர்வதையோ அல்லது பார்ப்பதையோ தடுக்குமாறு ஆப்பிள் மற்றும் கூகுள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களிடம் பிரித்தானிய  கலாச்சாரத் துறை அமைச்சர் லிசா நண்டி Lisa  Nandy  கேட்டுக்கொண்டார். ‘ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்’ House of Commons   அவையில் உரையாற்றும்போது அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார். அரசாங்கம் “முடிந்தவரை விரைவில்” இதற்கான சட்டத்தைக் கொண்டுவரும் என்றும் அவர் அறிவித்தார். இத்தகைய நடவடிக்கைகளைத் தாமாகவே முன்வந்து மேற்கொள்ளுமாறு, ஆப்பிள் மற்றும் […]

உலகம்

100 டொலர் என்ற எல்லையை தாண்டியது கச்சா எண்ணெய் விலை

  • September 9, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் மோதல்களால் அப்பகுதியிலிருந்து எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற கவலை அதிகரித்துள்ள நிலையில், இன்றைய தினம்’பிரெண்ட்’ ரக (Brent) கச்சா எண்ணெய் விலை 100 டொலர் என்ற எல்லையை தாண்டியுள்ளது. இதற்கமைய கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 2.2% அதிகரித்து 100.07 டொலராக உயர்ந்துள்ளது. அதேவேளையில், அமெரிக்காவின் ‘வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட்’ (WTI) கச்சா எண்ணெய் விலை 1.83% அதிகரித்து ஒரு பீப்பாய்க்கு 94.73 டொலராக அதிகரித்துள்ளது. ஆறு மாதங்களாக நீடிக்கும் அமெரிக்கா-ஈரான் […]

ஐரோப்பா

துருக்கி காட்டுத்தீ – நபர் ஒருவர் மரணம்

  • September 9, 2026
  • 0 Comments

துருக்கியின் அன்டால்யா மாகாணத்தில்  காட்டுத்தீ ஏற்பட்டபோது  நபர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். தீயினால் உருவான புகையைச் சுவாசித்ததால் அந்த நபர் உயிரிழந்ததாக அக்ஸு (Aksu) மாவட்ட மேயர் ஈசா யில்டிரிம் Isa Yildirim எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதேநேரம் அன்டால்யாவின் கும்லுகா (Kumluca) மற்றும் மெர்சினின் போஸ்யாசி (Bozyazi) மாவட்டங்களில் ஏற்பட்ட காட்டுத்தீ தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவற்றை முழுமையாக அணைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு முயற்சிகளில் உள்ளூர் மக்களும் […]

உலகம்

நோர்வே மன்னரின் இறுதிச் சடங்கு இன்று

  • September 9, 2026
  • 0 Comments

நோர்வேயின் மன்னர் ஹரால்ட் V, தனது 89-வது வயதில் காலமானதைத் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்ட 13 நாள் தேசிய துக்க நிகழ்வுகள் இன்றுடன் நிறைவுக்கு வருகின்றன. இந்நிலையில் இன்றைய இறுதி நிகழ்வில், அரச மாளிகையிலிருந்து ஓஸ்லோ கதீட்ரல் (Oslo Cathedral) வரை நடைபவணி இடம்பெறவுள்ளது. உள்ளூர் நேரப்படி மதியம் 12:00 மணிக்கு இந்த நடைபவணி ஆரம்பிக்கப்படுவதுடன், மதியம் 1.00 மணியளவில், தேவாலயத்தில் இறுதிச் சடங்கு நடைபெறும். இந்நிகழ்வு நாடு தழுவிய ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் தொடங்கும். பிரிட்டனின் […]