உலகம்

AfD கட்சியின் வெற்றிக்கு குடியேற்ற விதிமுறைகளே காரணம் – ட்ரம்ப் கருத்து

ஜெர்மனியின் தீவிர வலதுசாரி கட்சியான ‘ஆல்டர்நேட்டிவ் ஃபார் ஜெர்மனி’ (AfD), மாநிலத் தேர்தலில் வெற்றிப் பெற்றமைக்கு குடியேற்ற விதிமுறைகளே காரணம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

பெருமளவிலான குடியேற்றம் குறித்த பொதுமக்களின் அதிருப்தியால் வலுப்பெற்ற AfD கட்சி, சாக்சனி-அன்ஹால்ட் (Saxony-Anhalt) மாநிலத் தேர்தலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தீவிர வலதுசாரி கட்சியொன்று அதிகாரத்தைக் கைப்பற்றும் நிலைக்கு நெருங்கி வருவது இதுவே முதல் முறையாகும்.

சாக்சனி-அன்ஹால்ட் (Saxony-Anhalt) மாநிலத்தின் முதல்வராக வரவிரும்பும் AfD கட்சியின் உல்ரிச் சீக்மண்ட் Ulrich Siegmund, ட்ரம்பின் கொள்கைகளை போலவே சட்டவிரோத குடியேறிகளை நாடுகடத்துவதாக உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பில் ட்ரூத் தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், “அற்புதம்! ஜெர்மனியில் உள்ள மக்கள் ஆதரவு பெற்ற கட்சிக்கு (Populist Party) நேற்று மிகச் சிறப்பான இரவு அமைந்தது. ஜெர்மனிக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்திய மிகவும் மோசமான குடியேற்ற விதிகள் மற்றும் விதிமுறைகளால் அவர்கள் இறுதியாகச் சோர்வடைந்துவிட்டனர்,” என்று தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்