ஐரோப்பா

நிர்வாணப் படங்களை எடுப்பதையோ, பகிர்வதையோ தடுக்குமாறு தொழில்நுட்ப நிறுவனங்களிடம் கோரிக்கை

குழந்தைகள் தங்கள் அலைபேசிகள் மற்றும் டேப்லெட்களில் நிர்வாணப் படங்களை எடுப்பதையோ, பகிர்வதையோ அல்லது பார்ப்பதையோ தடுக்குமாறு ஆப்பிள் மற்றும் கூகுள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களிடம் பிரித்தானிய  கலாச்சாரத் துறை அமைச்சர் லிசா நண்டி Lisa  Nandy  கேட்டுக்கொண்டார்.

‘ஹவுஸ் ஆஃப் காமன்ஸ்’ House of Commons   அவையில் உரையாற்றும்போது அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

அரசாங்கம் “முடிந்தவரை விரைவில்” இதற்கான சட்டத்தைக் கொண்டுவரும் என்றும் அவர் அறிவித்தார்.

இத்தகைய நடவடிக்கைகளைத் தாமாகவே முன்வந்து மேற்கொள்ளுமாறு, ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு அரசாங்கம் 06 மாதத்திற்கு முன்னதாகவே கோரிக்கை விடுத்திருந்தது.

இளம் பயனர்களுக்கான உணர்திறன் மிக்க உள்ளடக்கங்களை (sensitive content) இந்த இரு நிறுவனங்களும் கண்காணித்தாலும், நிர்வாணப் படங்களை (selfies) எடுப்பதையோ அல்லது அனுப்புவதையோ அவை முழுமையாகத் தடுப்பதில்லை.

இதற்கிடையே ஆப்பிள் நிறுவனம் தனது இயங்குதளத்தில் (operating system) வயது சரிபார்ப்பு வசதியை அறிமுகப்படுத்தியதை நண்டி பாராட்டினார்

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்