ஐரோப்பா

துருக்கி காட்டுத்தீ – நபர் ஒருவர் மரணம்

துருக்கியின் அன்டால்யா மாகாணத்தில்  காட்டுத்தீ ஏற்பட்டபோது  நபர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

தீயினால் உருவான புகையைச் சுவாசித்ததால் அந்த நபர் உயிரிழந்ததாக அக்ஸு (Aksu) மாவட்ட மேயர் ஈசா யில்டிரிம் Isa Yildirim எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் அன்டால்யாவின் கும்லுகா (Kumluca) மற்றும் மெர்சினின் போஸ்யாசி (Bozyazi) மாவட்டங்களில் ஏற்பட்ட காட்டுத்தீ தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அவற்றை முழுமையாக அணைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு முயற்சிகளில் உள்ளூர் மக்களும் கைகோர்த்தனர்; பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தண்ணீரை எடுத்துச் செல்ல விவசாயிகள் டிராக்டர்கள் மற்றும் தண்ணீர் லொறிகளைப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்