ஐரோப்பா

ரஷ்யாவில் மேலும் 10,000 துருப்புகளைக் களமிறக்கும் வடகொரியா

ரஷ்யாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள 8,000 துருப்புகளுடன் கூடுதலாக 10,000 துருப்புகளை அனுப்ப வட கொரியா தயாராகி வருவதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மாஸ்கோ மற்றும் பியாங்யாங் இடையேயான ராணுவக் கூட்டுறவு அதிகரித்து வருவதை இது காட்டுவதாகவும், இது போரின் தன்மையை மேலும் தீவிரமடையச் செய்யும் என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் வட கொரியா மற்றும் ரஷ்யாவின் இந்த ஆபத்தான கூட்டணியைச் சமாளிக்க மேற்கத்திய நாடுகளும் நேட்டோ அமைப்பும் உடனடி மற்றும் கூட்டான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையே ரஷ்ய ஆயுதப்படைகளில் பணிபுரியும் வீரர்களின் எண்ணிக்கையை 15,500 அதிகரித்து 1.55 மில்லியனாக உயர்த்தும் ஆணையில் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் கையெழுத்திட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ரஷ்யாவின் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் கீவ் மற்றும் உக்ரைனின் பிற பகுதிகளைத் தாக்கியதில், குறைந்தது பத்து பேர் கொல்லப்பட்டதுடன்,   பொதுமக்களின் உள்கட்டமைப்புகளும் சேதமடைந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்