உலகம் செய்தி

RAF Fairford சம்பவத்தின் பின்னணியில் வெளிநாட்டு சக்தி: அமெரிக்கா தகவல்

ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களுக்கு அமெரிக்கப் படைகளால் பயன்படுத்தப்படும் பிரித்தானியாவின் RAF Fairford விமானத் தள சம்பவத்தின் பின்னணியில் "வெளிநாட்டுச் சக்தி ஒன்றின் கை ஓங்கியுள்ளது" என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களுக்கு அமெரிக்கப் படைகளால் பயன்படுத்தப்படும் பிரித்தானியாவின் RAF Fairford விமானத் தள சம்பவத்தின் பின்னணியில் “வெளிநாட்டுச் சக்தி ஒன்றின் கை ஓங்கியுள்ளது” என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 நபர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கு பிரித்தானியாவில் RAF Fairford விமானத் தளத்தில் பிரித்தானியா காவல்துறை அவசர சூழலை அறிவித்ததுடன், பிரித்தானியா அரசாங்கம் தேசிய அவசரகாலக் கூட்டத்தையும் நடத்தியது.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் திங்கள்கிழமை இரவு Fox News தொலைக்காட்சியின் Hannity நிகழ்ச்சியில் கருத்து வெளியிட்ட மார்கோ ரூபியோ,

“வார இறுதியில் பிரித்தானியாவில் நடந்த, நடக்கவிருந்த அல்லது நடந்திருக்கக்கூடிய சம்பவம் மிகவும் தீவிரமான ஒரு சூழலாகும். இதில் தெளிவாக ஒரு வெளிநாட்டுச் சக்தியின் கை ஓங்கியுள்ளது. அதுகுறித்து இப்போது விரிவான தகவல்களைப் பகிர முடியாது” என்று கூறினார்.

இருப்பினும், அவர் இதற்கான சான்றுகளையோ அல்லது குறிப்பிட்ட விவரங்களையோ வழங்கவில்லை.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி