உலகெங்கிலும் உள்ள தொழிற்சாலைகளில் 05 மில்லியன் ரோபோக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக தகவல்
உலகெங்கிலும் உள்ள தொழிற்சாலைகளில் தற்போது ஐந்து மில்லியனுக்கும் அதிகமான தொழில்துறை ரோபோக்கள் இயங்கி வருவதாக புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
தொழில்துறை ரோபோக்களின் உலகளாவிய செயல்பாட்டு இருப்பு கடந்த ஆண்டு 09 சதவீதமாக அதிகரித்து , சுமார் 5.08 மில்லியன் அலகுகளை எட்டியுள்ளது என்று சர்வதேச ரோபோட்டிக்ஸ் கூட்டமைப்பு (IFR) தெரிவித்துள்ளது.
அறிக்கையின்படி, தொழில்துறை ரோபோக்களின் வருடாந்திர நிறுவல்கள் 11 சதவீதம் அதிகரித்து, முதல் முறையாக 600,000-ஐத் தாண்டி, 603,000 அலகுகளை எட்டியுள்ளன.
“தொழில்துறை தன்னியக்கம் அதிவேகமாக முன்னேறி வருகிறது,” என்று IFR-இன் தலைவர் ஜேன் ஹெஃப்னர் கூறியுள்ளார்.
மேலும் IFR என்பது பிராங்பர்ட்டைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும்.
இது கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக இந்தத் துறையைக் கண்காணித்து வருகிறது மற்றும் உலகெங்கிலும் 3,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.




