ஐரோப்பா

விமானத்தில் பயணிகள் அறையை சூழந்த புகை – அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

பார்சிலோனாவிலிருந்து Barcelona பாஸ்டனுக்குச் Boston  சென்றுகொண்டிருந்த டெல்டா ஏர் லைன்ஸ் விமானம் ஒன்றின் பயணிகள் அறையில் திடீரென புகை சூழ்ந்தமையால் அவசரநிலை ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து விமானம் , போர்ச்சுகலின் போர்டோ நகரில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் இருந்த 283 பயணிகளும் 13 விமானப் பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவசரகால மீட்புப் பணியாளர்கள், விமான ஓடுபாதையிலேயே எட்டுப் பயணிகளுக்கு முதலுதவி அளித்துள்ளனர்.

அதேநேரம், லேசான காயங்களுடன்  மூவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணத்தில் ஏற்பட்ட இடையூறுக்கு டெல்டா ஏர் லைன்ஸ் நிறுவனம் மன்னிப்புக் கோரியதுடன், பயணிகளை அவர்களின் இறுதி இலக்கைப் பாதுகாப்பாகச் சென்றடையச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உறுதியளித்தது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்