அமெரிக்கா தங்கள் நாட்டின் மீது புதிய தாக்குதல் ஏதேனும் நடத்தும் பட்சத்தில், அது வளைகுடா பிராந்தியம் முழுவதிலும் உள்ள முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது கடுமையான பதிலடித் தாக்குதலுக்கு வழிவகுக்கும் என்று வளைகுடா நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

வளைகுடா எரிசக்தி மையங்கள் மீது தாக்குதல்: அமெரிக்காவிற்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை

  • August 6, 2026
  • 0 Comments

அமெரிக்கா தங்கள் நாட்டின் மீது புதிய தாக்குதல் ஏதேனும் நடத்தும் பட்சத்தில், அது வளைகுடா பிராந்தியம் முழுவதிலும் உள்ள முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது கடுமையான பதிலடித் தாக்குதலுக்கு வழிவகுக்கும் என்று வளைகுடா நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. வாஷிங்டனின் மிக நெருங்கிய பிராந்திய நட்பு நாடுகளை அச்சுறுத்துவதன் மூலம், ராணுவ நடவடிக்கையின் விளைவுகளை அமெரிக்காவிற்கு உணர்த்த ஈரான் முற்படுகின்றது என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த ஜூலை 28 அன்று, ஈரானின் எரிசக்தி வலையமைப்பு மற்றும் உள்கட்டமைப்புகளைத் […]

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் யோசனை தொடர்பில் தமது கட்சியின் உறுப்பினர் லால் விஜேநாயக்க மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும், இறுதியில் அவர் கட்சியின் பொது நிலைப்பாட்டிற்குத் தலைவணங்குவார் என நீதி அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கை செய்தி

புதிய அரசமைப்பு நிச்சயம் இயற்றப்படும்: நீதி அமைச்சர் உறுதி

  • August 6, 2026
  • 0 Comments

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் யோசனை தொடர்பில் தமது கட்சியின் உறுப்பினர் லால் விஜேநாயக்க மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும், இறுதியில் அவர் கட்சியின் பொது நிலைப்பாட்டிற்குத் தலைவணங்குவார் என நீதி அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில்  உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்: “எமது அரசாங்கத்திற்குள் உள்ளவர்களுக்கு இடையே வெவ்வேறான கருத்துகள் இருந்தாலும், இறுதியில் அனைவரும் பொதுவான ஒரு நிலைப்பாட்டையே ஏற்போம். இதுவே உண்மையான ஜனநாயகப் பண்பாடாகும். […]

இலங்கை

மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்த ஜனாதிபதியிடம் கோரிக்கை

  • August 6, 2026
  • 0 Comments

தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில், நீண்டகாலமாகத் தாமதப்படுத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தல்களை “விரைவில்” நடத்துமாறும், அரசியலமைப்பின் தொடர்புடைய விதிகளை முழுமையாகச் செயல்படுத்துமாறும் இந்தியா இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது. இந்திய வெளியுறவுச் செயலர், நேற்று (05) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தபோது இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். இதன்போது தித்வா புயலுக்குப் பிறகு இலங்கையின் மீட்புக்கான ஆதரவு, எரிசக்தி ஒத்துழைப்பு, வர்த்தக ஒப்பந்தத்தைப் புதுப்பித்தல், திருகோணமலையை எரிசக்தி மையமாக மேம்படுத்துதல், காங்கேசன்துறை […]

வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட ரெலோ அமைப்பைச் சேர்ந்த குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரின் சிலையையும், அங்கு கொல்லப்பட்ட 53 பேருக்கான நினைவுத் தூபியையும் நிறுவுவதற்குப் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு நேற்று புதன்கிழமையுடன் நீக்கப்படுகின்றது என்று நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. இலங்கை செய்தி

குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரின் சிலை அமைப்புக்கான தடை நீக்கம்

  • August 6, 2026
  • 0 Comments

வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட ரெலோ அமைப்பைச் சேர்ந்த குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரின் சிலையையும், அங்கு கொல்லப்பட்ட 53 பேருக்கான நினைவுத் தூபியையும் நிறுவுவதற்குப் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு நேற்று புதன்கிழமையுடன் நீக்கப்படுகின்றது என்று நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. கடந்த ஜூலை 25 அன்று தியாகிகள் குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரது 43ஆவது நினைவு நாளில் சிலை நிறுவுவதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதற்கிடையில், கடந்த ஜூலை 22 அன்று வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உப […]

உலகம்

ஒரு வழியாக உடன்பாட்டை எட்டிய ஈரான், ஓமான் – விரைவில் ஒப்பந்தம்?

  • August 5, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் ஜலசந்தியின் புவியியல் அம்சங்கள் (Geographic coordinates) குறித்து ஈரானும் ஓமானும் ஒரு உடன்பாட்டிற்கு வந்துள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் தெரிவித்தார். மூன்றாம் தரப்பினர் தலையிடாத பட்சத்தில், இது குறித்த ஒரு கூட்டு அறிக்கை இறுதிக்கட்டத்தில் உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். இருப்பினும், ஈரான் மற்றும் ஓமான் இடையே மட்டும் ஏற்படும் இத்தகைய உடன்பாடு, அந்த மூலோபாய நீர்வழியின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்காது என்றும் பாகேய் மேலும் கூறினார். முன்மொழியப்பட்ட […]

இந்தியா

முகப்புத்தக முடக்கம் : மோடியிடம் மன்னிப்புக் கோரினார் மெட்டா தலைமை அதிகாரி

  • August 5, 2026
  • 0 Comments

மெட்டாவின் தலைமை  அதிகாரி ஜோயல் கப்லான், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சமூக ஊடகப் பதிவை தற்காலிகமாக முடக்கியதற்காக இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சரிடம் மன்னிப்புக் கோரியுள்ளார். இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடியின் பதிவை தவறாக முடக்கியதற்காக மெட்டாவின் சார்பாக அமைச்சரிடம் மனப்பூர்வமாக மன்னிப்புக் கோருவதாக தெரிவித்துள்ளார். செயல்பாட்டுப் பிழை காரணமாக அந்தப் பதிவு கவனக்குறைவாக முடக்கப்பட்டதாக மெட்டா முன்னதாக தெரிவித்திருந்தது. இதேவேளை  , குழந்தைப் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கம் (CSAM), டீப்ஃபேக் உள்ளடக்கம் […]

ஐரோப்பா

லண்டனில் பாரிய வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் பேருந்து ஓட்டுநர்கள்

  • August 5, 2026
  • 0 Comments

லண்டனில் உள்ள எட்டு பணிமனைகளைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட பேருந்து ஓட்டுநர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். அரிவா நார்த் லண்டன் (Arriva North London)  நிறுவனத்தில் பணிபுரியும்  தொழிலாளர்களே மேற்படி வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளதாக இன்று அறிவித்துள்ளனர். ஆகஸ்ட் முதல் ஒக்டோபர் மாதம் வரை 26 நாட்கள் வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், வடக்கு லண்டன் மற்றும் எசெக்ஸ் முழுவதும் பேருந்து சேவைகள் பாதிக்கப்படும். கடுமையான வெப்பத்தின் போது ஓட்டுநர்களைப் பாதுகாக்க நிலைமைகளை மேம்படுத்துமாறு அரிவா நிறுவனத்தை […]

உலகம்

லொஸ் ஏஞ்சல்ஸில் கடலில் குளிக்க தடை

  • August 5, 2026
  • 0 Comments

லொஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி சுகாதார அதிகாரிகள், கடலில் இறங்குவதற்கு அல்லது குளிப்பதற்கு தடை விதித்துள்ளனர். கடலில் காணப்படும் பாக்டீரியா காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெனிஸ் பியர் ( Venice Pier) , சாண்டா மோனிகா பியர் (Santa Monica Pier),  மெரினா டெல் ரேயில் (Marina del Rey) உள்ள மதர்ஸ் பீச் (Mother’s Beach) மற்றும் சான் பெட்ரோவில் உள்ள இன்னர் கப்ரில்லோ பீச் ( Inner Cabrillo Beach ) ஆகிய இடங்கள் […]

உலகம்

சீனாவின் இராணுவ படைகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் – ஜப்பானின் வெள்ளை அறிக்கைக்கு கண்டனம்

  • August 5, 2026
  • 0 Comments

ஜப்பானின் சமீபத்திய பாதுகாப்பு வெள்ளை அறிக்கையில் சீன இராணுவம் குறித்து கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை வன்மையாக நிராகரிப்பதாகவும், அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் சீன தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன் செய்தித் தொடர்பாளர் சென் ஷி, சீனாவுக்கு எதிராக ஜப்பான் சுமத்தியுள்ள இந்த பொய்யான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று நேற்று (04) ஊடகங்களிடம் தெரிவித்தார். மேலும், தனது இராணுவ பலத்தை அதிகரிப்பதற்காக தற்போதுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு ஜப்பான் சீனாவை சாக்காகப் பயன்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகத்தால் […]

செம்மணி மனித புதைகுழியில் இன்று (05) மேலும் 08 புதிய எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இலங்கை செய்தி

செம்மணியில் தோண்டத் தோண்ட எலும்புக் கூடுகள்: இன்றும் 08 அடையாளம்

  • August 5, 2026
  • 0 Comments

செம்மணி மனித புதைகுழியில் இன்று (05) மேலும் 08 புதிய எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 44 ஆவது நாளான இன்று அகழ்வுப் பணி இடம்பெற்றது. இதன்போது 08 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன. அத்துடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 8 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. இதற்கமைய செம்மணி புதைகுழியில் இதுவரை மொத்தமாக 491 என்பு […]