இந்தியா

முகப்புத்தக முடக்கம் : மோடியிடம் மன்னிப்புக் கோரினார் மெட்டா தலைமை அதிகாரி

மெட்டாவின் தலைமை  அதிகாரி ஜோயல் கப்லான், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சமூக ஊடகப் பதிவை தற்காலிகமாக முடக்கியதற்காக இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சரிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடியின் பதிவை தவறாக முடக்கியதற்காக மெட்டாவின் சார்பாக அமைச்சரிடம் மனப்பூர்வமாக மன்னிப்புக் கோருவதாக தெரிவித்துள்ளார்.

செயல்பாட்டுப் பிழை காரணமாக அந்தப் பதிவு கவனக்குறைவாக முடக்கப்பட்டதாக மெட்டா முன்னதாக தெரிவித்திருந்தது.

இதேவேளை  , குழந்தைப் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கம் (CSAM), டீப்ஃபேக் உள்ளடக்கம் மற்றும் செயல்பாட்டுக் குறைபாடுகள் ஆகியவற்றிற்காக மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கும் இந்திய அரசிடம் மன்னிப்புக் கோரியுள்ளதாக இந்திய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்திய அரசு அதிகாரிகளுக்கும் மெட்டா நிர்வாகிகளுக்கும் இடையே நடந்த சந்திப்பின்போது இந்த மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே