ஐரோப்பா

லண்டனில் பாரிய வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் பேருந்து ஓட்டுநர்கள்

லண்டனில் உள்ள எட்டு பணிமனைகளைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட பேருந்து ஓட்டுநர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

அரிவா நார்த் லண்டன் (Arriva North London)  நிறுவனத்தில் பணிபுரியும்  தொழிலாளர்களே மேற்படி வேலை நிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளதாக இன்று அறிவித்துள்ளனர்.

ஆகஸ்ட் முதல் ஒக்டோபர் மாதம் வரை 26 நாட்கள் வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், வடக்கு லண்டன் மற்றும் எசெக்ஸ் முழுவதும் பேருந்து சேவைகள் பாதிக்கப்படும்.

கடுமையான வெப்பத்தின் போது ஓட்டுநர்களைப் பாதுகாக்க நிலைமைகளை மேம்படுத்துமாறு அரிவா நிறுவனத்தை தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளதுடன், நிலைமைகள் குறித்த முறைப்பாடுகள் தொடர்பில்   நடவடிக்கை எடுக்கத் தவறியதாகவும் அந்நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளது.

சமீபத்திய வெப்ப அலையின்போது ஓட்டுனர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்